"கம்யூனிகேஷன்(ஸ்) பாயிண்ட்" - தமிழ் வார செய்திதாள் மற்றும் "க்ரைம் பாயிண்ட்" புலனாய்வு வாரஇதழ்

உலகச் செய்திகள்


ஏப்ரல் மாதம் 2-ந் தேதி லண்டனில் ஒபாமாவை மன்மோகன்சிங் சந்திக்கிறார்




புதுடெல்லி, மார்ச்.25-

ஏப்ரல் 2-ந் தேதி, லண்டனில் ஒபாமாவை, மன்மோகன் சிங் சந்திக்கிறார். இங்கிலாந்து பிரதமரையும் அவர் சந்தித்து பேசுகிறார்.

உலக அளவில், மிகவும் வளர்ச்சி அடைந்த நாடுகள் மற்றும் வளர்ச்சி அடைந்த நாடுகளின் தலைவர்களின் மாநாடு (ஜி-20) லண்டன் நகரில், ஏப்ரல் மாதம் 2-ந் தேதி தொடங்குகிறது.

இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் மற்றும் பல்வேறு நாட்டின் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மன்மோகன் சிங், வரும் 31-ந் தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு செல்கிறார்.

லண்டன் சென்றடைந்ததும், ஜி.20 மாநாட்டில் மன்மோகன்சிங் கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் அவர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை சந்தித்து பேசுகிறார். பின்னர் இங்கிலாந்து பிரதமர் பிரவுனையும் அவர் சந்திக்கிறார்.

இந்த இரு நாட்டு தலைவர்களையும், மன்மோகன்சிங் சந்திப்பது, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission
DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly newspaper
send your comments and corrections