திரைச்செய்திகள் உயிரின் உயிரே ![]() ![]() ![]() ![]() ![]() ![]() + சென்னை, செப்டம்பர்.20-2009 ஸ்ரீ கன்னியப்பன் கிரியேஷன்சாரின் 'உயிரின் உயிரே' திரைப்படத்தை வசனம் எழுதி இயக்கியுள்ளார் புதிய இயக்குனர் மகேஷ்வர். முற்றிலும் புதுமுகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. கிராமத்து வழலில் தொடங்கி, காதலில் விழுந்து, பிரிகின்ற காதல் ஜோடி சேர்கின்றார்களா என்பதும் அடுத்தடுத்து கதாநாயகியின் தோழிகள் இரண்டு பேர் கொல்லப்படுவது எதனால் என்ற கேள்விக்கு விடை கடைசிக்காட்சியில் வருகிறது. சிறிய பட்ஜட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தின் இயக்குனரே தயாரிப்பாளர். மதர்ஸ் டே, பாதர்ஸ் டே, ஏன் முட்டாள்களுக்கு கூட ஏப்ரல் ஒன்றாம் தேதி ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது. ஆனால் புத்திசாலிகளுக்கு மட்டும் ஏன் ஒரு தினத்தை கொண்டாடக்கூடாது என்று கேள்வி எழுப்புகிறார் இயக்குனர் மகேஷ்வர். முட்டாள்கள் தினத்தை மைய்யமாக வைத்து கிராமத்தில் ஆரம்பிக்கும் காட்சிகள் நகரத்தில் நடக்கும் கொலைகளுக்கு விடையைத்தேடி முடிகிறது. கொலைகளுக்கான காரணம் என்ன என்பதும், கதாநாயகி கொலைகாரனிடமிருந்து தப்பிக்கிறாளா இல்லையா என்பதே இறுதிக்காட்சி. ஆதிஷ் இசையமைத்த பாடல்களை எழுதியவர் இளையதாசன். ஒளிப்பதிவாளர் கணேஷ் கேமராவை கையாள அஷோக் மேத்தா மேற்பாற்வையில் எடிட்டிங் நடந்துவரும் இந்த படம் விரைவில் வெள்ளித்திரைக்கு வர உள்ளது. எஸ்.எஸ்.ஆர்.சுகுமார். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9043023578 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly newspaper send your comments and corrections |