![]() COMMUNICATION(S) POINT as your Homepage சமூக சேவகி சரோஜினி வரதப்பனுக்கு பத்மபூஷண் விருது "தமிழக அரசியல்" அரசியல் களம் 1900 முதல் 1940 1900களில் இருந்தே முக்கிய சமூக நிகழ்வுகள் தமிழகத்தில் நடந்தாலும் தமிழக அரசியல் களம் 1940களில் சூடு பிடித்தது. இந்தி எதிர்ப்பு போராட்டங்கள், திராவிட கொள்கைகள், பகுத்தறிவு கொள்கைகள், வாரிசு அரசியல், வன்முறை அரசியல் போன்ற கூறுகளுக்கு தமிழக அரசியல் பிரசித்தி பெற்றது. பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் திராவிட, பொதுவுடமை, சோசலிச கொள்கைகள் கொண்டவையாக விளங்குகின்றன. காமராஜர், ஈ. வெ. ராமசாமி, அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் தமிழக அரசியலில் முக்கியம் வாய்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். ஊழல், காழ்ப்புணர்ச்சி, அரசியல் பகை போன்ற குற்றச்சாட்டுகள் பெரும்பான்மையாக இருந்தாலும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும், சமூக மாற்றங்களுக்கும் தமிழக அரசியல் முக்கிய ஊன்றுகோலாக இருந்தது என்று சொல்வது மிகையாகாது. பெருந்தலைவர் காமராஜர் ![]() குமாரசாமி காமராஜ் பொதுவாக காமராஜர் தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954 ஆம் ஆண்டு் அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார். இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராஜ் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர் பெருந்தலைவர் எனவும் அறியப்படுகிறார். காமராஜர் விருதுநகர் மாவட்டத்திலுள்ள விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார்.அவருடைய பெற்றோர் குமாரசாமி மற்றும் சிவகாமி அம்மாள் ஆவார்கள். தனது பள்ளி படிப்பை க்ஷத்ரிய வித்யா சாலா பள்ளியில் துவங்கினார். படிக்கும் போதே மிகவும் பொறுமையுடனும் விட்டு கொடுக்கும் மனதுடனும் விளங்கினார். காமராஜ் முதலமைச்சராக பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய நீர்பாசனதிட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை கீழ் பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும். கிங் மேக்கர் இந்தியாவின் பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தியை பதவியில் அமர்த்தியதில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது "காமராஜர் ஆட்சி அமைப்போம்" இந்திய தேசிய காங்கிரஸ் (Indian National Congress) (காங்கிரஸ் கட்சி அல்லது காங்கிரஸ் (I) என்றும் அழைக்கப்படுகிறது, சுருக்கமாக INC) இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். 1885ல் தொடங்கப்பட்ட இக்கட்சி, இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றது. இக்கட்சியின் அமைப்புகளில் 15 மில்லியன் இந்திய மக்களும், ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து நாடு முழுவதும் நடந்த போராட்டங்களில் 70 மில்லியன் மக்களும் பங்கெடுத்தனர். 1947ல் இந்தியா விடுதலை அடைந்த பின்னர், நாட்டின் அதிகாரம் மிகுந்த அரசியல் கட்சியாக உருவெடுத்தது. 14வது இந்திய நாடாளுமன்றத்தில் (2004 - 2009), 145 உறுப்பினர்களை பெற்றிருக்கும் இக்கட்சி, அதிக உறுப்பினர்களை கொண்டிருக்கும் தனிப்பெரும் கட்சியாகத் திகழ்கிறது. இடது முன்னணியின் ஆதரவுடன் நடைபெறும் தேசிய முற்போக்குக் கூட்டணி அரசின் முதன்மை உறுப்பினராகவும் இக்கட்சி விளங்குகிறது. பொழுதுபோகாத தமிழக காங்கிரஸ் கட்சியினர் அடிக்கடி சொல்வது "காமராஜர் ஆட்சி அமைப்போம்" அமைப்போம் என்பதே. அரசியல் களம் 1900 - 1947 தமிழகத்தின் முதல் அரசியல் கட்சியாக நீதிக் கட்சி விளங்கியது. 1916 ஆம் ஆண்டு பி. தியாகராயர் அவர்களால் தொடங்கப்பட்டது. மதராஸ் மாகாணத்தில் 1920 இல் நடந்த தேர்தலில் 98 தொகுதிகளில் 63 தொகுதிகள் வெற்றி பெற்று பெரும்பான்மையாக ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சியில் இருந்த பெரியார், இட ஒதுக்கீடு சம்பத்தப்பட்ட கொள்கையில் கருத்து வேறுபாடு காரணங்களினால் நீதிக் கட்சியில் சேர்ந்தார். 1944 ஆம் ஆண்டு நீதிக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். பின்பு நீதிக் கட்சியை திராவிட கழகம் என்று பெயர் மாற்றினார். அக்கட்சி பின்பு திராவிட கொள்கைகளும், ஹிந்தி எதிர்ப்பு கொள்கைகளும், தனித் திராவிட நாடு கொள்கைகளும் மக்களிடம் பரப்பி கொண்டு வந்தது. ஆட்சி அதிகாரத்தில் விருப்பம் இல்லாமல் இருந்த பெரியாரை விட்டு பிரிந்த அறிஞர் அண்ணா பின்பு திராவிட முன்னேற்ற கழகத்தைத் தொடங்கினார். பெரியார் எனப்படும் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் ![]() பெரியார் எனப் பரவலாக அறியப்படும் ஈ. வெ. ராமசாமி (E.V.RAMASAMY, செப்டம்பர் 17, 1879 - டிசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, உயர்சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம விழுமியத்தை கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். கடவுள் நம்பிக்கை, சமயம் என்பவை மூடநம்பிக்கைகளை வளர்ப்பதாகக் கருதிய ஈ.வெ.ரா, தீவிர நாத்திகராக இருந்தார். இவருடைய விழுமியங்களும், கொள்கைகளும், தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும் (சுயமரியாதை இயக்கம், நாத்திகம்) , அரசியல் பரப்பிலும் (திராவிடர் கழகம்) ஆழ்ந்த சலனங்களும், தாக்கங்களும் ஏற்படுத்தியவை. மிக இளம் வயதிலேயே பாடசாலைக் கல்விக்கு முழுக்குப்போட்டுவிட்டுத் தந்தையாரின் வணிக முயற்சிக்குத் துணையாக இருந்தார். எனினும் சமூக ஈடுபாடு இவரைத் தீவிர அரசியலுக்குத் தூண்டியது. தனது நாற்பதாவது வயதில் விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, தனது மனைவியுடன் சிறை சென்றார். காந்தியடிகளின் கொள்கையை ஏற்றுக்கொண்டு அந்த இயக்கத்தின் பல்வேறுபணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். பின்னர் கொள்கை அடிப்படையில் காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து, அரசியலிலிருந்து ஒதுங்கிய ஈ.வே.ரா அவர்கள், தன்மான இயக்கத்தில் அக்கறை காட்டத்தொடங்கினார். திராவிடத் தேசியத்தின் மீது ஆர்வம் கொண்டிருந்த இவர், இதே கருத்துடைய வேறு பலருடன் சேர்ந்து தனது கொள்கைகளை வற்புறுத்தி வந்தார். அக்காலத்தில் பரவலாக திகழ்ந்த வடமொழி ஆதிக்கம், பிராமண ஆதிக்கம் போன்றவற்றுக்கு எதிராகப் போராடிவந்தார். 1939 இல் இவர் சார்ந்திருந்த இயக்கத்தினூடாகத் தனி் திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்தார். 1944 இல் இவருடைய இயக்கம் திராவிடக் கழகம் எனப்பெயர் பெற்றது. இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர், பெரியாரின் சில செயற்பாடுகளில் அதிருப்தியடைந்த சிலர், சி. என். அண்ணாதுரை தலைமையில் திராவிடக் கழகத்திலிருந்து விலகி, திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் இயக்கத்தைத் தொடங்கினர். பெரியாருடன் கருத்து வேறுபாடு இருந்தபோதும், தி.மு. கழகத்தினர், அவருடைய கொள்கைகளையே பின்பற்றிவந்தனர். 1967 ல் தி.மு.க வினர் தமிழ்நாட்டில் ஆட்சியமைத்தபோது பெரியார் அவர்களுக்கு ஆதரவு வழங்கினார். அரசியல் களம் 1947 - 1962 இந்திய சுதந்திரத்திற்கு பின் காங்கிரஸ் அனைத்து மாநிலங்களிலும் ஜனநாயக முறையில் பெரும் வெற்றியைப் பெற்றது. தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற ராஜாஜி சிறிது காலத்திலேயே கட்சிக்குள்ளே ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடுகளால் முதலமைச்சர் பதவியை துறந்தார். இதன் பின் முதல்வர் பதவி ஏற்ற காமராஜ் தமிழகத்தில் மிக பெரிய அளவில் கல்வி மற்றும் தொழில் துறையில் பெரும் புரட்சி ஏற்படுத்தினார். இவர் காலத்தில் தொடங்கிய மதிய உணவு திட்டம் இன்று தமிழகம் கல்வியறிவில் சிறந்து விளங்க முக்கிய காரணமாக உள்ளது. இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிளும் முதல் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு உள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு திட்டம் செயல்படுத்தப் படுகின்றது. மேலும் விவசாயம் மற்றும் தொழில் வளம் பெருகிட இந்த ஆட்சி உதவியது. தமிழக அரசியலில் மிக முக்கியமான கல்வி மற்றும் தொழில் வளர்ச்சி இக்காலத்தில் ஏற்பட்டதால் அரசியல் ஆர்வலர்கள், பெரும்பானவர்கள் கட்சி, கொள்கை வேறுபாடின்றி பாராட்டும் 'பொற் கால ஆட்சி' என்று சொல்வது மிகையாகது. தென்னாட்டு பெர்னாட்ஷா - "அறிஞர் அண்ணா" - அண்ணாதுரை ![]() பரவலாக "அறிஞர் அண்ணா" என்று அறியப்பட்ட, காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909] - 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில்,மத்திய தரக் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, நீதிக் கட்சியில் சேர்ந்தார். பின்னர் பெரியாருடன் திராவிடக் கழகத்தில் இணைந்து, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கருத்துக்களையும், சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் பரப்புவதில் முன்னின்று ஈடுபட்டார். பெரியாரின் சில நடவடிக்கைகள் காரணமாக எழுந்த கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, திராவிடக் கழகத்தின் முக்கிய உறுப்பினர் பலருடன், 1949 ல், பெரியாரை விட்டு விலகி, திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) என்ற புதிய இயக்கமொன்றை நிறுவினார். 1957 ஆம் ஆண்டு வரை தி.மு.க, ஒரு சமூக சீர்திருத்த இயக்கமாகவே இருந்துவந்தது. 1957 ல் நடைபெற்ற தேர்தலில் கலந்து கொள்ள முடிவு செய்த கழகம், அத்தேர்தலில் 15 இடங்களை வென்றபோது அண்ணாதுரையும் சட்ட சபை உறுப்பினரானார். தொடர்ந்து வந்த பத்தாண்டு காலத்தில், தமிழ் மக்களுக்குப் பாதகமானது என்று கருதப்பட்ட, மத்திய அரசின் மொழிக்கொள்கைக்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்தியதன் மூலம், தி.மு.க வை ஒரு பலம் மிக்க அரசியல் இயக்கமாக வழி நடத்திச் சென்றார்.இதன் காரணமாக 1967 ல் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். மக்களின் பேராதரவைப் பெற்றிருந்தும், இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியிலிருக்க அவரால் முடிந்தது. புற்று நோய்க்கு ஆளான அவர், 2-3 பிப்ரவரி 1969 ல் காலமானார். ஒரு முதலமைச்சராக மட்டுமன்றி, ஒரு அறிஞராகவும், சமூக சீர்திருத்த வாதியாகவும், ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும், மிகச் சிறந்த பேச்சாளராகவும், மக்கள் தலைவனாகவும், இன்றும் தமிழக மக்களால் அவர் நினைவு கூறப்படுகிறார். அரசியல் களம் 1962 - 1967 மொழி அரசியல் இக்கால கட்டத்தில் முக்கிய கூறாக விளங்கியது. திராவிட இயக்கித்தில் இருந்து பிரிந்த அண்ணா மற்றும் முத்துவேல் கருணாநிதி 1949ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழக்கத்தைத் சென்னை இராயபுரம் ராபின்சன் பூங்காவில் தொடங்கினார்கள். 1952ஆம் ஆண்டு முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம் பெரியாரால் தொடங்கி வைக்கப்பட்டது. எனினும் 1965 மற்றும் 1968ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள் தமிழக அரசியலில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்தது. தனி தமிழ்நாடு போராட்டங்கள் 1939 முதல் இருந்தாலும் 1963ஆம் அன்றைய பிரதமர் நேரு கொண்டு வந்த சட்டம் தனிநாடு கேட்கும் கட்சிகளை தடை செய்தது. பின்பு அண்ணா அக்கோரிக்கையை கைவிட்டார். 1960களில் திமுக போராடிய ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள் 1967 தேர்தலில் அவர்களுக்கு பேரும் வெற்றியை கொண்டு வந்தது. அன்று முதல் இன்று வரை திராவிட கட்சிகளே தமிழக ஆட்சி கட்டிலில் அமர்கின்றனர். அரசியல் களம் 1967 - 1981 அண்ணா முதலமைச்சர் கட்டிலில் 2 ஆண்டுகள் வகித்தார். இக்காலத்தில் மதராஸ் மாகாணம் என்பது தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது. இரு மொழி கொள்கையும், சுயமரியாதை கல்யாணம், இட ஒதுக்கீடு ஆகியவை சட்டங்களாக இயற்றப்பட்டன. இரண்டே ஆண்டுகள் ஆட்சி செய்தாலும் நிறைய சமூக மாற்றங்களுக்கு இந்த ஆட்சி முக்கிய பங்கு வகித்தது. எம். ஜி. ஆர், எஸ். எஸ். ஆர், கண்ணதாசன், சிவாஜி போன்ற சினிமா பிரபலங்கள் இக்கால கட்டத்தில் அரசியல் களத்தில் புகழ் பெற்றனர். 1969ஆம் ஆண்டு அண்ணா மறைவுக்கு பின்னர் கருணாநிதி முதல்வரானார். இக்கால கட்டத்தில் திமுக கட்சியில் உயர் மட்ட தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு எற்பட்டது. கண்ணதாசன், சிவாஜி போன்றோர் அரசியலில் பிரகாசிக்கவில்லையென்றாலும் எம்.ஜி.ஆர் மக்களிடையே மிக பிரபலம் அடைந்தார். பதவி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் போன்ற காரணங்களினால் திமுக-விலுருந்து பிரிந்த எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்னும் தனி கட்சியை தொடங்கினார். கலைஞர் முத்துவேல் கருணாநிதி ![]() ![]() கலைஞர் முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi) (பிறப்பு - ஜூன் 3, 1924) திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன உறுப்பினர்களுள் ஒருவர். 1969 முதல் அக்கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார். மே 13, 2006 முதல் ஐந்தாவது முறையாகத் தமிழ்நாட்டு முதலமைச்சராக பொறுப்பு வகிக்கிறார். இவருடைய எழுத்து வன்மை, பேச்சாற்றலின் காரணமாக கலைஞர் எனப் பலராலும் அழைக்கப்படுகிறார். தி.மு.க.வின் தொடக்க கால உறுப்பினர்.1957ம் ஆண்டிலிருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். தமிழகத்தின் முதல்வராக ஐந்துமுறை பதவி வகித்த பெருமை இவருக்கு உரியது. 1969-1971 - அண்ணாதுரை மறைவிற்கு பின் முதல் முறை ஆட்சி
1971-1974 - இரண்டாவது முறையாக காங்கிரசை வீழ்த்தி ஆட்சி
1989-1991 - நீண்ட நாள் இடைவேளைக்கு பின் (எம்.ஜி.ஆர் ) மூன்றாம் முறை ஆட்சி
1996-2001 - நான்காம் முறை ஆட்சி
2006-இன்றுவரை - ஐந்தாம் முறையாக ஆட்சி
தொடக்க காலத்தில் பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக எதிர்த்த இவர்,
பிற்காலத்தில் அதே கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டது, ஊடகங்களாலும் எதிர்க்கட்சிகளாலும் விமர்சிக்கப்பட்டது. 1957 -முதல் 2006 வரை போட்டியிட்ட அனைத்து சட்டமன்றப் பேரவைத் தேர்தல்களிலும்
வென்றுள்ளார்.எதிர்க் கட்சித் துணைத் தலைவர்-1962-67.சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக 1977 முதல் 1983 வரை பணியாற்றியுள்ளார்.1967-69 -ல் தமிழ்நாடு அமைச்சரவையில்
பொதுப்பணித் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். 1969 முதல் 1971 வரை, 1971 முதல் 1976 வரை, 1989 முதல் 1991 வரை, 1996 முதல் 2001 வரை தமிழ்நாட்டின் முதலமைச்சர்.
பல அரசியல் போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம்., இரயில்வே நிலையப் பெயர் மாற்றப் போராட்டம்,
விலைவாசி உயர்வை எதிர்த்துப் போராட்டம், இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான போராட்டம் போன்ற பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு பல முறை சிறை சென்றுள்ளார்.1983-ல் இலங்கைத்
தமிழர்களின் நலனுக்காகப் போராடும் வகையில் தனது சட்டப் பேரவை உறுப்பினர் பதவியைத் துறந்தார். மு.க. ஸ்டாலின் தற்பொழுதைய (2009) தமிழ்நாடு உள்ளாட்சித்துறை அமைச்சராக உள்ளார்.
மகள் கனிமொழி இந்திய நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக உள்ளார். "குடும்ப அரசியல்" - எதிர்கட்சிகள் விமர்சனம் தி.மு.க.தலைவர் கருணாநிதி அவர்களே... நீங்கள் தி.மு.க. தலைவராயிருக்கிறீர்கள்;
முதலமைச்சராகவுமிருக்கிறீர்கள்; தங்கள் மகன் ஸ்டாலின் கட்சியின் பொருளாளராயிருக்கிறார்; உள்துறை அமைச்சராகவுமிருக்கிறார்; தங்கள் மூத்த மகன் அழகிரிக்கென்று (புதிதாக ஒரு பதவியை உருவாக்கி)
தென் மண்டல அபைப்புச் செயலாளராக்கியிருக்கிறீர்கள். உங்கள் அருமை மகள் கனிமொழியும், உங்கள் பேரன் தயாநிதி மாற்னும் பாரளுமன்ற உறுப்பினர்களாயிருக்கிறார்கள்; உங்கள் இன்னொரு
மகன் மு.க.தமிழரசுக்கும், உங்கள் பேத்தி கயல்விழிக்கும் எப்போது பதவி வழங்கப் போகிறிர்கள்..? கழகம் ஒரு ( கருணாநிதி) குடும்பம் அல்லவா? எம்.ஜி.ஆர் - M.G.இராமச்சந்திரன் எம்ஜிஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (ஜனவரி 17, 1917 -
டிசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தவர். இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும்
சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தையின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத்தொடர
முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார். நாடகத்துறையில் நன்குப் அனுபவமான நிலைமையில் திரைப்படத்துரைக்குச் சென்றார். திரைப்படத்துரையில்
தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேரி நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமாவார். இவர் தங்கமணியை
மணந்தார் இவர் நோய்க்காரணமாக இறந்தார். அதன் பிறகு சதானந்தவதியை மணந்தார் இவரும் நோய்க் காரணமாக இறந்தார். பின்னர் இவர் வி.என்.ஜானகியை மணந்துக்கொண்டார். இவருக்கு பிள்ளைகள் கிடையாது. 1936 ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம்
வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். நடிகர்வேள் எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய
நட்சத்திர வலிமை குறையவேயில்லை. நல்ல குணங்கள் நிறைந்த கதா பாத்திரங்களையே தேர்வு செய்து நடித்தார். இவர் ஒரு மலையாளியாக இருந்தும், ஒரு முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும், திராவிட
முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். சி. என். அண்ணாத்துரையின் மறைவுக்குப் பின், மு. கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து
இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேற வேண்டிய நிலையை ஏற்படுத்தின. 1972 ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார். திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும்,
ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின.
1977ல் இடம் பெற்ற தேர்தலில் பெரு வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். 1984 ல் இவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர்
பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். அவர் மறைவிற்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. தமிழ் நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள். இவர் இறந்து, 17 ஆண்டுகளுக்கு மேலாகியும்,
இன்றும் இவருக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த அளவு கடந்த செல்வாக்கையே காட்டுகிறது. அரசியல் களம் 1981 - 1990 தனி கட்சியை ஆரம்பித்த எம்.ஜி.ஆர் 1980ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான
வெற்றிப் பெற்று தமிழக முதல்வரானார். அவர் ஆண்ட இக்கால கட்டத்தில் நிறுத்தி வைத்திருந்த மதிய உணவு திட்டத்தை மறுபடியும் தொடங்கி வைத்தார். மேலும் உயர் கல்வியிலும் நிறைய
மாற்றங்களை கொண்டு வந்தார். இக்கால கட்டத்தில் தமிழ் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது, மேலும் பல புதிய பொறியியல் கல்லூரிகள், மற்றும் மருத்துவ கல்லூரிகளும் தொடங்க வைக்கப்பட்டன.1987ஆம் எம்.ஜி.ஆர் மறைந்தவுடன் குறுகிய காலம் அவர் மனைவி ஜானகி ராமசந்திரன் முதல்வர் பதவியில் இருந்தார். கலைச்செல்வி ஜெ. ஜெயலலிதா தமிழ் நாட்டு அரசியல் தலைவரும் பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் ஆவார்.
ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை படத்தின் மூலம் திரைப்படத்துறையில் அறிமுகமானார். பின்னர், அ. தி. மு. க. வில் இணைந்து,அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார். எம். ஜி. இராமச்சந்திரனின்
மறைவுக்கு பிறகு 1989 ஆண்டில் அ. தி. மு. க தலைவியானார். 1991] முதல் 1996 வரையிலும், 2001 முதல் மே 12, 2006 வரையிலும் தமிழ் நாட்டு முதல் அமைச்சராக இருந்தார். ஜெயலலிதா ஜெயராம் 1948 ஆம் ஆண்டு மைசூர்- ல் பிறந்தார்.
தனது இரண்டாம் வயதில் தந்தையை இழந்தார் ஜெயலலிதா.தந்தையின் பெயர் ஜெயராம்,தாய் நடிகை சந்தியா. குடும்ப வறுமை காராணமாக தாய் சந்தியாவோடு சென்னைக்கு குடிபெயர்ந்தார். ஜெயலலிதாவின் இயற் பெயர் கோமளவல்லி.
பிஷப் காட்டன் ஸ்கூல் பெங்களூர் இல் கல்வி பயின்றார். தனது .சென்னையில் சர்ச் பார்க் கான்வென்டில் கல்வி கற்றார்!.தாய் சந்தியாவின் வழிகாட்டுதலோடு சினிமாவில் நடிகையாக நுழைந்தார்!.
முதல் தமிழ் படம் "வெண்ணிற ஆடை". "சின்னதாகொம்பே" என்ற கன்னட படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது,பின்னர் தொள்ளயிரத்தி எழுபத்தி இரண்டில்,
மனுஷுலு மமதாலு என்கிற தெலுகு படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றார்.தமிழ்நாடு அரசின் மூலம் கலைமாமணி பட்டமும் பெற்றார் . எம்.ஜி.ஆரோடு கொண்ட நட்புறவின் மூலம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் எண்பத்தி ஒன்றாம் ஆண்டில் இணைந்தார். எண்பத்தி எட்டாம் ஆண்டு இந்திய பாராளுமன்றத்திற்கு ராஜ்யசபை எம்.பி யாக தேர்ந்தெடுக்கப்பட்டார் செல்வி.ஜெயலலிதா. எம்.ஜி ஆருடைய மறைவ்ரிக்கு பிறகு .காட்சியில் ஏற்ப்பட்ட பிளவின் காரணமாக இவர் ஒதுக்கப்பட்டு.
திருமதி ஜானகி ராமச்சந்திரன் அவர்கள் முதல் பெண் முதலமைச்சர் ஆனார் . பின்னர் 1991 இந்திய தேசிய காங்கிரஸ் உடன் கொண்ட கூட்டணியின் மூலம் ,ராஜிவ் காந்தி கொலை
செய்யப்பட சில தினங்களில் நடந்த தேர்தலில் வீசிய அனுதாப அலையின் மூலம் செல்வி.ஜெயலலிதா மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதல் பெண் முதல் அமைச்சர் என்ற பெருமையை தமிழக அரசியலில் பெற்றார். மொத்தம் மூண்டு முறை முதல்வராக பதவி வகித்த ஜெயலலிதா அதிகம் சர்ச்சைகளில் வழக்கில் சிக்கிய முதல்வர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். அம்மா என்று அழைக்கப்படும் ஜெயலலிதா ,வயதில் பெரிய அமைச்சர்களை கூட தனது காலில் விழுந்து வாழ்த்து பெறுவதை பொது மேடைகளில் கூட தமிழ்நாடு காண செய்தார். இந்திய அரசியலில் இரும்பு பெண்மணியாக விளங்குபவர் ஜெயலலிதா!. தோழி சசிகலா தனது குடும்ப உறுப்பினர்களோடு பெரும் செல்வங்களை அரசியல் செல்வாக்கின் மூலமாக பெற்று இந்தும் இவருடைய நிழலாக இருப்பது பல்வேறு
கண்டனங்களையும் ,எதிர்ப்புகளையும் ஏற்படுத்தி இவரை பல வழக்குகளில் சிக்க செய்தன. ஒரு கிலோ எடையுள்ள தங்க ஒட்டியாணம் மட்டும் ஏறக்குறைய ஐம்பத்து லட்ச ருபாய் மதிப்புடையதாக கணக்கிடப்பட்டது!.468 வகையான தங்க ஆபரணங்கள் தேடுதலின் போது கை பற்றப்பட்டது!.
திருமணம் செய்துகொள்ளாமல் செல்வியாக இருந்து வரும் ஜெயலலிதா, சசிகலா என்கிற சாதாரண வீடியோ லைப்ரரி நடத்தி வந்தவரை தனது
ஆத்ம தோழியாக ஏற்று கொண்டார். வேறு யாரும் அவரை நெருங்காதவன்னம் உயிர் தோழிகளாக இன்று வரை உள்ளார்கள். ஜோசியம் ,யாகம் என பலவற்றை நடத்தி தன்னை சக்தி மிக்கவராக காட்டி கொண்டவரும் ஜெயலலிதாதான் ! லாட்டரி களை, சந்தன வீரப்பனை, தனது ஆட்சி காலத்தில் ஒழித்து புகழ் பெற்றார். தொட்டில் குழந்தை திட்டம்,மற்றும் மழை நீர் சேமிப்பு என புதிய திட்டங்களால் பாரட்டபெற்றார். மதம்மாற்ற தடை சட்டம், அரசு பணியாளர்கள் ஒரு லட்சத்தி எழுபது ஆயிரம் பேரை அதிரடி பனி நீக்கம் செய்தவர் ஜெயலலிதா .இதுவே அவருடைய ஆட்சி இழப்பிற்கு காரணமாக அமைந்தது எனலாம் ! அரசியல் களம் 1991 - 2006 1991 முதல் 1996 வரை ஆண்ட ஜெயலலிதா 1996ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் பெரும்
தோல்வி அடைந்தார். பின்பு 1996 முதல் 2001 வரை கருணாநிதி முதல்வர் பதவி வகித்தார். இக்கால கட்டத்தில் மதிமுக கட்சி உருவானது. பின்பு 2001ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற
அதிமுக 2006 வரை ஆட்சி பொறுப்பில் இருந்தது. சினிமா நடிகர் விஜயகாந்த் தேசிய திராவிட முற்போக்கு கழகம் என்னும் கட்சியை தொடங்கனார்.
2006ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தது. அரசியல் களம் 2006 - 2008 தமிழக அரசியலில் முதன் முறையாக பெரும்பான்மை கிடைக்காத காரணத்தினால் திமுக காங்கிரஸ்,
பாமக, கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளின் உதவியால் கூட்டனி ஆட்சி அமைத்தது. 2007-ஆம் ஆண்டு சினிமா நடிகர் சரத்குமார் அகில இந்திய சமத்துவக் கட்சி என்னும் கட்சியை தொடங்கினார். அரசியல் களம் 2009 பாராளுமன்றத்தின் இரு சபைகளும் வருகிற (பிப்ரவரி) 12 ந் தேதி அன்று கூடுகிறது.
முதல் நாளான 12ஆம் தேதி அன்று, பாராளுமன்ற மைய அரங்கத்தில் நடைபெறும் இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் உரையாற்றுகிறார். இந்த கூட்டத் தொடர் 26 ந் தேதி வரை இரண்டு வார காலம் நீடிக்கும்.
இது தொடர்பாக, மக்களவை செயலகம் மற்றும் டெல்லி மேல் சபை செயலகம் ஆகியவற்றில் இருந்து தனித்தனியாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின. இந்த கூட்டத் தொடரானது, தற்போதைய 14 வது பாராளுமன்றத்தின்
15 வது கூட்டத் தொடர் ஆகும். வருகிற ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இதுவே 14 வது பாராளுமன்றத்தின் கடைசி கூட்டத் தொடராக
அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. |