"கம்யூனிகேஷன்(ஸ்) பாயிண்ட்" - தமிழ் வார செய்திதாள் மற்றும் "க்ரைம் பாயிண்ட்" புலனாய்வு வாரஇதழ்

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்


அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா இளைஞர் எழுச்சி நாளாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.


சென்னை, பிப்.




உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள், தமிழகம் முழுவதும் இளைஞர் எழுச்சி நாளாக உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

தி.மு.க. துணை பொதுசெயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மார்ச் 1-ந் தேதி தனது 57-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அன்றைய தினத்தை இளைஞர் எழுச்சி நாளாக தி.மு.க. வினர் கொண்டாடுகிறார்கள்.

இந்த விழாவை மிக சிறப்பாக தமிழகம் முழுவதும் பட்டி தொட்டியெங்கும் சிறப்பாக கொண்டாட தி.மு.க.வினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள். தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, மீனவர்அணி, விவசாய அணி, வக்கீல் அணி தொ.மு.ச.பேரவை போன்ற கட்சியின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

மாவட்டங்கள் தோறும், அனைத்து நகர, ஒன்றிய, பகுதி தி.மு.க. சார்பில் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளன்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

தென் சென்னையில் உள்ள 85 வட்டங்களிலும், 200 குழுக்கள் கலந்து கொள்ளும் கிரிக்கெட், கபடி, கால்பந்தாட்டம், வாலிபால் உள்பட பல போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வட்டத்திலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கவும் தென் சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தென் சென்னை மாவட்ட இளைஞரணி சார்பில் ரத்ததான முகாம், மருத்துவ முகாம், ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள், பள்ளி மாணவர்களுக்கு உதவிகள், தொடர் பொதுக்கூட்டங்கள் ஆகியவை நடத்துவதற்கான ஏற்பாடுகளை நுங்கை வி.எஸ்.ராஜ் செய்து வருகிறார்.

அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளன்று தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் பட்டிமன்றம், ஏழைகளுக்கு அன்னதானம், அரசு ஆஸ்பத்திரிகளில் தூய்மை பணி மேற்கொண்டு மரக்கன்றுகள் நடுவது, அன்றைய தினம் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவிப்பது, அஞ்சல் கணக்கு தொடங்குவது, பள்ளிக் குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்குவது, ஊனமுற்றோருக்கு நலத்திட்டஉதவிகள், இலவச மருத்துவ முகாம், ரத்ததானம், கண்தானம், உடல் உறுப்புகள் தானம், இலவச வேட்டி, சேலைகள் வழங்குவது, தொடர் பொதுக்கூட்டங்கள் நடத்துவது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தி.மு.க.வினர் நடத்துகிறார்கள்.

தனது பிறந்தநாளான மார்ச் 1-ந்தேதி உள்ளாட்சித்துறை அமைச்சர் தொண்டர்களை சந்தித்து அவர்களின் வாழ்த்துக்களை பெற்றுக் கொள்கிறார். காலை 7.30 மணியில் இருந்து அவருடைய "குறிஞ்சி" இல்லத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இது தொடர்பாக ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் எம்.டி.ஆர்.ரகுநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், உள்ளாட்சித்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளான ஞாயிறுக்கிழமை காலை 7.30 மணி முதல் தனது "குறிஞ்சி" இல்லத்தில் கட்சி தொண்டர்களை சந்திக்கிறார்'' என்று கூறியிருக்கிறார்.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission
DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly newspaper
send your comments and corrections