"கம்யூனிகேஷன்(ஸ்) பாயிண்ட்"- தமிழ் வார செய்திதாள் மற்றும் "க்ரைம் பாயிண்ட்" புலனாய்வு வாரஇதழ்

இன்றைய (28-09-2009) செய்திப் புகைப்படங்கள்


47 ஆண்டுகளாகியும் தீரவில்லை பகை


இந்திய-சீனா இடையே, போர் நடந்து 47 ஆண்டுகளாகியும், இந்தியாவே தங்களது முக்கியமான எதிரி என்ற எண்ணம் இன்னும் சீனர்கள் மத்தியில் மேலோங்கியிருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சன்டே டைம்ஸ் பத்திரிக்கை நடத்திய ஆய்வில், இரும்புத்திரை நாடு என அழைக்கப்படும் சீனாவில், மற்ற எந்த விஷயங்களையும் விட இந்தியா குறித்த எதிர்மறையான கருத்துகளை பேச, தடை ஏதும் விதிக்கப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. திபெத்திய பீடபூமியை மீட்க இந்தியா மீது மற்றொரு போர் நடத்தலாம் என வெளிப்படையாக கூறுமளவிற்கு அங்கு இந்தியா மீதான கோபம் அதிகமாக உள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.


த்ரில்லர், ஆக்ஷன் படங்களுக்கு மேலும் இரு ஆங்கில சேனல்கள்


த்ரில்லர், ஆக்ஷன் பாணி படங்களை காண மேலும் இரு ஆங்கிலச் சேனல்கள் வருகின்றன. ஹாங்காங்கைச் சேர்ந்த, 'டைகர் கேட் என்டர்டெயின்மென்ட்' கம்பெனி, ஹாலிவுட்டிலுள்ள, 'லயன்ஸ் கேட் புரொடக்ஷன்' கம்பெனியுடன் இணைந்து இரண்டு புதிய சேனல்களை 250 கோடி ரூபாய் செலவில் ஆரம்பிக்கிறது. த்ரில் மற்றும் கிக்ஸ் என்ற பெயருடைய இந்தச் சேனல்களில், த்ரில்லர் மற்றும் ஆக்ஷன் படங்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் மட்டுமே ஒளிபரப்பப்படும்.


இன்றைய செய்திப் புகைப்படங்கள்























திருவாரூர் மத்திய பல்கலை - கபில் சிபல் திறந்து வைக்கிறார்


திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தை செப்டம்பர் 30ம் தேதி, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் திறந்து வைக்கிறார். இவ்விழாவில், முதல்வர் கருணாநிதி மற்றும் துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்தியா முழுவதும் 12 மத்திய பல்கலை., திறக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, திருவாரூர் பல்கலைக்கழகம் திறக்கப்படுகிறது. முதற்கட்டமாக, முதுகலை படிப்புகளாக, எம்.ஏ., ஆங்கிலம், தமிழ் மற்றும் மாநில மொழிகள் அறிமுகப்படுத்தப்படும் என்று பல்கலை., துணைவேந்தர் பி.பி. சஞ்சய் தெரிவித்துள்ளார்.


ஏர்இந்தியா ஸ்டிரைக் : கோரிக்கைகளை பரிசீலிக்க குழு அமைப்பு


ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வரும் ஏர் இந்தியா பைலட்டுகளின் கோரிக்கைகளை பரிசீலிக்க குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாக, ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் ஜிதேந்திர பார்கவா தெரிவித்துள்ளார். ஏர் இந்தியா பைலட்டுகளின் ஸ்டிரைக் இரண்டாவது நாளாக நடந்து வரும் வேளையில், ஏர் இந்தியா சி.எம்.டி., அரவிந்த ஜாதவ், பைலட்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் நான்கு மணிநேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், பைலட்டுகளின் கோரிக்கைகளை பரிசீலிக்க குழு அமைப்பது என முடிவெடுக்கப்பட்டது. இக்குழுவில், எக்சிகியூட்டிவ் டைரக்டர் (பைனான்ஸ்), எக்சிகியூட்டிவ் டைரக்டர் (இண்ட்ஸ்டிரியல் ரிலேசன்), ஜெனரல் மேனேஜர் (ஆபரேஷன் மும்பை) மற்றும் பைலட்டுகளின் பிரதிநிதிகள் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர். இம்முடிவுகளையடுத்து, ஏர் இந்தியா பைலட்டுகள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பச்சிளம் ஆண் குழந்தை சடலம் கண்டெடுப்பு


நெல்லை கலெக்டர் அலுவலகம் எதிரே தாமிரபரணி ஆற்றில் பச்சிளம் குழந்தை இறந்த நிலையில் கிடந்தது. திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியில் கலெக்டர் அலுவலகம் உள்ளது. கலெக்டர் அலுவலகத்திற்கு எதிரே தாமிரபரணி ஆற்றங்கரையில் பச்சிளம் குழந்தை ஒன்று துணியில் சுற்றி போடப்பட்டிருந்தது. ஆற்றில் குளிக்கச்சென்றவர்கள் பார்த்தபோது தொப்புள் கொடியின் ஈரம் கூட காயாக பச்சிளம் ஆண் குழந்தை இறந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. குழந்தையை மீட்ட போலீசார் அதனை நெல்லை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.


போலீசாருக்கு புலனாய்வு பயிற்சி தர நான்கு இடங்களில் சிறப்பு பள்ளிகள்


மாநில போலீசாருக்கு புலானய்வு குறித்த பயிற்சியை அளிப்பதற்காக, திருவனந்தபுரம் உட்பட நான்கு இடங்களில் சிறப்பு பயிற்சி பள்ளிகளை அமைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பயங்கரவாதம், நக்சலைட் போன்ற பிரச்னைகள் நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. மத்திய உளவு நிறுவனங்களுடன், மாநில போலீசாரும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே, இதுபோன்ற பிரச்னைகளை சமாளிக்க முடியும். இதற்காக, மாநில போலீசாருக்கு புலனாய்வு குறித்த சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, திருவனந்தபுரம், லக்னோ, போபால் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு பயிற்சி பள்ளிகள் அமைக்கப்பட உள்ளன. மற்றொரு பயிற்சி பள்ளி வட கிழக்கு மாநிலங்களில் ஏதாவது ஒன்றில் அமைக்கப்படும்.


வீடுகளில் இரவில் திருடிய கூர்க்காக்கள் இருவர் கைது


தென்காசியில் வீடு வீடாக திருடிய இரண்டு கூர்க்காக்கள் கைது செய்யப்பட்டனர். ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தென்காசி மேலகரம் பகுதியில் இரவு காவலில் ஈடுபட்ட கூர்க்காக்கள் இருவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்களிடம் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பில் தங்கநகைகள், வெள்ளிபொருட்கள், டிவிடி பிளேயர் போன்றவை இருந்தன. விசாரித்தபோது தாங்கள் பாதூகாவலில் ஈடுபடும் பகுதியில் ஆள் இல்லாத வீடுகளில் திருடியதாக ஒப்புக்கொண்டனர். நேபாளத்தில் பஜன் மாவட்டம் சுகேரா கிராமத்தை சேர்ந்த தீபக்சிங், கோபால் பகதூர் சிங் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.இவர்கள் மீது ஏற்கனவே திண்டுக்கல், போடி பகுதியிலும் திருட்டு வழக்குகள் உள்ளன.


சாம்பியன்ஸ் டிராபி: நியூசிலாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி


தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் பி பிரிவில் நியூசிலாந்து அணியும் இலங்கை அணியும் மோதின. போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்ததை அடுத்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 277 ரன்களில் ஆட்டமிழந்தது. நியூசிலாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.


Bookmark and Share

©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9043023578
No part of this website may be reproduced or used in any form without permission
DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly newspaper
send your comments and corrections