இன்றைய (28-09-2009) செய்திப் புகைப்படங்கள் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் கொலு காட்சி திருவண்ணாமலை பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் கொலு கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அண்ணாமலையின் தத்ரூப காட்சி, பகவான் ஆசிரமம் என பிரதான் மந்திரில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட கொலு, காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. தினசரி மாலையில் பக்தி பாடல்கள் நிகழ்ச்சி நடக்கிறது. ஆசிரம நிர்வாகி ஜஸ்டிஸ் அருணாச்சலம் தலைமையிலான பக்தர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். ராகுலை புகழ்ந்த சத்ருகன் : பா.ஜ.,வில் புகைச்சல் பிரபல நடிகரும், பா.ஜ.,கட்சி தலைவருமான சத்ருகன் சின்கா, ராகுலை புகழ்ந்து பேசியது பா.ஜ.,வில் புகைச்சலை கிளப்பியுள்ளது. மகாராஷ்டிராவில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பின், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தை சத்ருகன் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சத்ருகன், ராகுல் ஒரு முதிர்ந்த தலைவர் என்றும், அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்றும் கூறினார். இன்றைய செய்திப் புகைப்படங்கள் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() சாம்பியன்ஸ் டிராபி: இங்கிலாந்து அணி 22 ரன் வித்தியாசத்தில் வெற்றி தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் பி பிரிவில் தென் ஆப்ரிக்க அணியும் இங்கிலாந்து அணியும் மோதியது. போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 297ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணி 22 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கந்தமாலில் குண்டுவெடித்து ஒருவர் பலி ஒரிசாவின் கந்தமால் மாவட்டத்தில் மறுவாழ்வு மையத்தில் குண்டு தயாரித்த கொண்டிருந்த போது வெடித்ததில் ஒருவர் பலியானார். 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அருணாச்சல் முதல்வர் முக்தோ தொகுதியில் இருந்து போட்டியின்றி தேர்வு அருணாச்சல பிரதேச முதல்வர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டோர்ஜி கந்து முக்டோ தொகுதியில் இருந்து போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து யாரும் போட்டியிட மனு தாக்கல் செய்யாததால் கந்து வெற்றி பெற்றுள்ளார். டோர்ஜி கந்து முக்டோ தொகுதியில் இருந்து 3வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரை தவிர காங்கிரஸ் வேட்பாளர்கள் சீவாங் தோண்டூப்(டவாங் டவுன்) தொகுதியில் இருந்தும், ஜாம்பே டாஷி(லும்லா) தொகுதியில் இருந்தும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஜெய்ப்பூரில் உலக சுற்றுலா தின கொண்டாட்டம் ஜெய்ப்பூரில் உலக சுற்றுலா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தன. இதில் மோகினியாட்டம், கதக் மற்றும் ஒடிசி போன்ற நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும ராஜஸ்தான் சுற்றுலா கழகம் சார்பில் பல போட்டிகள் நடத்தப்பட்டன. ஆப்கனில் குண்டுவெடித்து 4 பேர் பலி ஆப்கனில் எரிசக்தி துறை அமைச்சர் மொகம்மது இஸ்மாயில் கானை குறிவைத்து நடத்தப்பட்ட கார்குண்டுவெடிப்பில் சிக்கி பொதுமக்கள் 4 பேர் பலியானார்கள். 17 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 17 பேரில் 3 பேர் அமைச்சரின் பாதுகாவலர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். போலி வாக்களர் அடையாள அட்டை அதிகரிப்பு : ராஜ் தாக்கரே குற்றச்சாட்டு மகராஷ்டிரா மாநிலத்தில் போலி அடையாள அட்டைகள் அதிகரித்துள்ளதாகவும், இதற்கு மாநிலத்தை ஆளும் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியே காரணமென்றும், மேலும் இதற்கு பா.ஜ.,வை சேர்ந்த பிரமுகர் ஒருவர் உடந்தையாக இருப்பதாக மகராஷ்டிரா நவநிர்மாண் சேனா கடசி தலைவர் ராஜ் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த விவகாரம் குறித்து எந்த கட்சியும் பேசவில்லை என்றும கூறினார். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9043023578 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly newspaper send your comments and corrections |