"கம்யூனிகேஷன்(ஸ்) பாயிண்ட்" - தமிழ் வார செய்திதாள் மற்றும் "க்ரைம் பாயிண்ட்" புலனாய்வு வாரஇதழ்

அரசியல்(16-08-2009)


காங்கிரசில் சேர விஜயசாந்தி முடிவு






ஆந்திராவில் தல்லி தெலுங்கானா (தாய் தெலுங்கானா) கட்சியை நடத்தி வந்த நடிகை விஜயசாந்தி பின்னர் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியில் தனது கட்சியை இணைத்துக்கொண்டார். பின்னர் அந்த கட்சி சார்பில் மெதக் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். தற்போது நடிகை விஜயசாந்திக்கும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவர்களுக்கும் கருத்து வேறுபாடு நிலவுகிறது.

இந்த நிலையில் நடிகை விஜயசாந்தி கடந்த மாதம் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியை சந்தித்து பேசினார். தனது தொகுதி நலனுக்காக நிதி ஒதுக்கக்கோரி முதல்வரை சந்தித்ததாக விஜயசாந்தி கூறினார்.

இதற்கிடையே விஜயசாந்தி நேற்று மீண்டும் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியை சந்தித்து பேசினார். தனது தொகுதி மேம்பாட்டுக்காக கோரிக்கை மனுக்களை கொடுத்தார்.

பின்னர் வெளியே வந்த அவரை நிருபர்கள் சூழ்ந்து கொண்டு ராஜசேகரரெட்டியை மீண்டும் சந்தித்துள்ளீர்களே காங்கிரசில் சேரப்போகிறீர்களா? என்று கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த விஜயசாந்தி நான் காங்கிரசில் சேர வேண்டும் என்று விதி இருந்தால் அது கூட நடக்கும் என்றார். மேலும் அவர் கூறியதாவது:-

எனது தொகுதி மக்களின் நலனுக்காக முதல்வரிடம் மனு கொடுக்க சந்தித்தேன் தற்போது குடிநீர் தட்டுபாட்டை போக்குவதற்காக நகரத்துக்கு ரூ.7 கோடியும், கிராமத்துக்கு ரூ.4 கோடியும் நிதி ஒதுக்க கேட்டுள்ளேன்.

எனது மெதக்தொகுதியில் 2.5 லட்சம் ஏக்கர் பயிர்கள் காய்ந்து வறட்சி நிலவுகிறது. அந்த விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கு மாறு கூறினேன். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பதால் அவர்களிடம் தான் மக்கள் பிரச்சினையை எடுத்துக் சொல்லி உதவி கேட்க முடியும். இதில் என்ன தவறு. மெதக்தொகுதியில் வறட்சி பகுதிகளை பார்வையிட வருமாறு முதல்வரை அழைத்தேன். அவரும் வருகிறேன் என்று உறுதி அளித்துள்ளார்.

இவ்வாறு விஜயசாந்தி கூறினார்.

Bookmark and Share

©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission
DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly newspaper
send your comments and corrections