"கம்யூனிகேஷன்(ஸ்) பாயிண்ட்" - தமிழ் வார செய்திதாள் மற்றும் "க்ரைம் பாயிண்ட்" புலனாய்வு வாரஇதழ்

அரசியல்(18-03-2009)


அத்வானிக்கு உமாபாரதி ஆதரவு





பா.ஜனதா கட்சியின் தீப்பொறி பேச்சாளராக திகழ்ந்தவர் உமாபாரதி. பெண் சன்னியாசியான இவர், கடந்த 2003 -ம் ஆண்டு நடந்த மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் அதிரடியாக களம் இறங்கினார். அவரது அனல் பறக்கும் பிரசாரத்தின் மூலம் காங்கிரஸ் வசம் இருந்த மத்திய பிரதேச மாநிலத்தில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதைத்தொடர்ந்து உமாபாரதி அம்மாநில முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.

இதற்கிடையே உமா பாரதிக்கும், கட்சி மேலிடத் தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் பா.ஜனதா கட்சியில் இருந்து விலகினார். பாரதீய ஜனசக்தி என்ற புதிய கட்சியை உருவாக்கினார்.

மத்தியபிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் உமாபாரதி தோல்வி அடைந்தார். அவரது கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வில்லை. இந்த நிலையில் பா.ஜனதா கூட்டணி கட்சிகளின் பிரதமர் வேட் பாளராக எல்.கே.அத்வானி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் பிரதமர் ஆக ஆதரவு தருவதாக உமாபாரதி கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தை பா.ஜனதா தலைவர் ராஜ்நாந்சிங் மூலம் அத்வானிக்கு அனுப்பியுள்ளார். அதில் நான் உங்கள் மகளைப் போன்றவள் என்று உமாபாரதி கூறியுள்ளார்.

இது குறித்து உமா பாரதியிடம் கேட்ட போது, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கும் என்ற எண்ணத்திலோ அல்லது பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட வேண்டும் என்ற நோக்கத்திலோ நான் அத்வானிக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் அனுப்பவில்லை என அவர் தெரிவித்தார்.

ஆனால் அவர் மீண்டும் பா.ஜனதா கட்சியில் சேர திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு முன்னோட்டமாகத்தான் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission
DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly newspaper
send your comments and corrections