"கம்யூனிகேஷன்(ஸ்) பாயிண்ட்"- தமிழ் வார செய்திதாள் மற்றும் "க்ரைம் பாயிண்ட்" புலனாய்வு வாரஇதழ்

சுயஉதவி குழுவுக்கு ரூ.4,138 கோடி கடன் வழங்கல் சமத்துவபுரம் திறப்பு விழாவில் ஸ்டாலின் பேச்சு




தமிழகத்தில் கடந்த 2006ம் ஆண்டு இந்த அர சு பொறுப்பேற்ற பின், மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு இதுவரை நான்காயிரத்து 138 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கப்ப ட்டுள்ளது,'' என தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார். கரூர் மாவட்டம் கடவூர் பஞ்சாயத்து யூனியன், வீரணம்பட்டி, மேலப்பகுதி பஞ்சாயத்தில் சமத்துவபுரம் திறப்பு விழா, மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கும் விழா ஆகியவை நடந்தது.

நிகழ்ச்சியில், கரூர் கலெக்டர் உமாமகேஸ்வரி வரவேற்றார். மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை இணையமைச்சர் நெப்போலியன் தலைமை வகித்தார். சமத்துவபுரத்தை திறந்து, மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு சுழல்நிதி வழங்கி, புதிய கட்டிடங்களை திறந்து, நலத்திட்ட உதவிகள் வழங்கி, வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு அடிக்கல்லை திறந்து வைத்து தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஒரு நிகழ்ச்சியில் எவ்வளவு பேர் இருந்தாலும், அவ்வளவு பேருக்கும் நானே இருந்து முழுமையாக நலத்திட்ட உதவிகளை வழங்கிச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். இதன்மூலம் தாய்மார்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

பொதுப்பணி, உள்ளாட்சி, நெடுஞ்சாலை, குடிநீர் வடிகால் வாரியம், கரூர் நகராட்சி ஆகியவை 30 கோடியே 83 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 187 பணிகளுக்கு தற்போது அடிக்கல் நாட்டப்படுகிறது. உள்ளாட்சி, சுகாதாரம், பதிவுத் துறை உள்ளிட்ட துறைகள் சார்பில், 37 கோடியே 10 லட்சத் து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் திறப்பு விழா செய்யப்படுகிறது. சமூகநலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கூட்டுறவு போன்ற துறை மூலம், ஆறு கோடியே 63 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் மதிப்பில், ஆயிரத்து 163 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது. முதல்வர் கருணாநிதி 148 இடங்களில் சமத்துவபுரங்களை உருவாக்கினார்.

2001ல் ஆட்சி மாற்றம் வந்தது. ஐந்தாண்டு காலத்தில் இதுபோன்ற சமத்துவபுரம் உருவாக்க வேண்டுமென்ற எண்ணம் இல்லை. ஏற்கனவே, கட்டப்பட்ட சமத்துவபுரத்தை பராமரிக்கக் கூட முடியவில் லை. கடந்த 2006ல் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பின் மீண்டும் சமத்துவபுரம் திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது ஏற்கனவே இருக்கக்கூடிய 148 சமத்துவபுரங்களில் ஈ.வெ.ரா., சிலை உருவாக்கப்படும் என அறிவித்துள்ளார். மகளிர் சுயஉதவிக்குழு என்பதும் ஈ.வெ.ரா., கண்ட கனவு தான். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டுமென முன்னாள் பிரதமர் ராஜீவ் தீர்மானம் கொண்டு வந்தார். இதை இந்தியாவில் முதன்முதலாக தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி தான் நடைமுறைப்படுத்தி, உள்ளாட்சி அமைப்புகளி ல் 33 சதவீத இடஒதுக்கீடு அளித்தார்.

கடந்த 1989ம் ஆண்டு பெ ண்களுக்கு திருமண நிதியுவித் திட்டத்தை முதல்வர் கருணாநிதி கொண்டு வந்தார். இந்த நிதியுதவி தற்போது 20 ஆயிரம் ரூபாயா க உயர்த்தி வழங்கப்படுகிறது. கடந்த 2006ம் ஆண்டு இந்த அரசு பொறுப்பேற்ற பின், மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு இ துவரை நான்காயிரத்து 138 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சி காலத்தில், 76.2 கோடி ரூபாய் சுழல் நிதியும், ஆயிரத்து 616 கோடி ரூபாய் வங்கி கடன் மட்டுமே வழங்கப்பட்டது. வங்கியில் பெற்ற கடனை வட்டியோடு முறையா க, 99 சதவீத மகளிர் சுயஉதவிக்குழுவினர் செலுத்தி விடுகின்றனர். எங்களை போன்ற ஆண்கள் கடன் வாங்கினால், எப்படி ஏமாற்றலாம் என நினைக்கின்றனர். பெண்களுக்காக, ஏழை எளிய மக்களுக்காக நடக்கிறது இந்த ஆட்சி.

முதல்வர் சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். இந்த ஆட்சிக்கு எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் வாசுகி, எம்.எல்.ஏ., க்கள் காமராஜ், கலீலூர் ரஹீமா ன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ரமேஷ்பாபு, கடவூர் பஞ்சாயத்து ஒன்றிய தலைவர் நந்தினிதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். டி.ஆர்.டி.ஏ., திட்ட அலுவலர் கவிதா நன்றி கூறினார்.

Bookmark and Share

©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9043023578
No part of this website may be reproduced or used in any form without permission
DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly newspaper
send your comments and corrections