மதுபான பாரில் நடனம்: ஆண்டரியாவுடன் இரவு விடுதியில் மோதலா? செல்வராகவன் பேட்டி ![]() செல்வராகவனும் ஆண்ட்ரியாவும் காதலிப்பதாக செய்தி பரவியுள்ளது. செல்வராகவன் இயக்கும் “ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் ஆண்ட்ரியா நடித்து வருகிறார். படப்பிடிப்பின் போது இருவரும் நெருக்கமானதாகவும் இரவு விருந்துகளில் இருவரும் சேர்ந்து பங்கேற்பதாகவும் கூறப்பட்டது. செல்வராகவன்- சோனியா அகர்வால் விவாகரத்துக்கு இந்த காதல் விவகாரமே காரணம் என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் இரவு விருந்து ஒன்றில் செல்வராகவனுக்கும் ஆண்ட்ரியாவுக்கும் காரசார மோதல் ஏற்பட்டதாக இன்னொரு செய்தி பரவியது. இருவரும் நட்சத்திர ஓட்டலில் நடந்த அந்த விருந்துக்கு சேர்ந்து சென்றனர். நேரம் ஆக ஆக விருந்தில் பங்கேற்றவர்கள் மது அருந்தி ஆடக்துவங்கினார்கள். ஒரு கட்டத்தில் ஆண்ட்ரியாவுக்கும் அவர்களோடு ஆட ஆசை வந்தது. ஆனால் செல்வராகவன் ஆடக்கூடாது என்று எதிர்த்தார். ஆண்ட்ரியா கேட்கவில்லை மீறி ஆடினார். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஓட்டல் ஊழியர்கள் வந்து செல்வராகவனை அந்த இடத்தில் இருந்து வலுக்கட்டாயமாக இழுத்து போய் வெளியேற்றினார்கள் என்றெல்லாம் கிசு கிசுக்கள் வந்தன. இந்த சம்பவம் பற்றி செல்வராகவனிடம் கேட்டபோது மறுத்தார். பத்திரிகைகளில் இச்செய்தியை பார்த்தேன். அது கற்பனையானது கடந்த இரு வாரங்களாக நான் சென்னையில் இல்லை. லடாக்கில் சில நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்றேன். தற்போது மும்பையில் எனது புது படத்துக்கான லொகேஷன் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். ஆண்ட்ரியாவுக்கும் எனக்கும் ஒரு இயக்குனர் நடிகை என்ற வகையில்தான் தொடர்பு உள்ளது. தனிப்பட்ட முறையில் எந்த உறவும் இல்லை. எங்கள் தொடர்பு பரிசுத்தமானது. ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9043023578 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly newspaper send your comments and corrections |