நேர்காணல் - (17-04-2009)
திருவள்ளூர் தொகுதியின் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் ஆனந்த் அவர்களுடன் ஓர் நேர்காணல் திருவள்ளூர், ஏப்ரல்.17-
கேள்வி : தமிழ்நாட்டில் இரண்டு திராவிடக்கட்சிகளிலோ, காங்கிரஸ் போன்ற தேசியக்கட்சிகளில் இணையாமல் பகுஜன் சமாஜ் கட்சியைத் தேர்ந்தெடுக்கக் காரணம்? பதில் : தலைவி மாயாவதி அவர்கள், ஏழைகள் எல்லா ஜாதியிலும் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, மேல் சாதி ஏழைகளுக்கும் உதவும் வகையில் திட்டங்கள் வகுத்ததோடல்லாமல், செயலிலும் நடத்திக் காட்டியுள்ளார். இதைப்போல, அகில இந்திய அளவில் நடைமுறைப்படுத்த தக்க அளவில் உள்ள திட்டங்கள் என்னை கவர்ந்தன. இந்த திட்டங்கள் தமிழகத்திலும் செயல்படுத்தப்பட்டு, தமிழ் மக்கள் பயன்பட வேண்டும் என்பதேஎன்னுடைய எண்ணம் ஆசை எல்லாம் என்பதுதான். கேள்வி : உத்திரப்பிரதேசத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள சில திட்டங்கள் பற்றி விளக்கமுடியுமா? பதில் : உத்திரப்பிரதேசத்தில் உள்ள அத்தனை கிராமங்களுக்கும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இது இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத சிறப்பு. அரசுக்குச் சொந்தமான இடங்களில் வாழ்ந்துவரும் மக்களுக்காக நகர குடிசைப்பகுதி குடியுரிமைத் திட்டம் உருவாக்கப்பட்டு 15ச.மீ.முதல் 30 சதுர மீட்டர் வரை ஏழை மக்களுக்கு சொந்தமாக கொடுக்கப்பட்டுள்ளது. ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கிட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தனியார் மய அபாயத்தை நீக்க தனியார் துறையில் இட ஒதுக்கீடு. உயர்வகுப்பு ஏழைகளுக்கும் தனி இட ஒதுக்கீடு. பெண்கள் மேம்பாட்டில் சிறப்பு கவனம். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வளவு நல்ல திட்டங்கள் உள்ளன. இவற்றை செயல்படுத்த வேண்டும் என்ற உறுதியான எண்ணமும் ஆற்றலும் தலைவி மாயாவதி அவர்களிடம் இருப்பதுதான் தனிச்சிறப்பு. கேள்வி : திருவள்ளூர் தொகுதியில் செய்ய வேண்டிய பணிகள் பற்றி.. பதில் : முதலில் மக்களின் அடிப்படித்தேவைகளை நிறைவேற்றவேண்டும். இவ்வளவு பெரிய தொகுதியில் ஏராளமான தனியார் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அரசுப் பொறியியல் கல்லூரி ஒன்று கூட இல்லை.நடுத்தர ஏழைக் குடும்ப மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல், மற்றும் கணிப்பொறி கல்வி எட்டாக்கனியாகவே உள்ளது. இதுவரை ஆண்ட காங்கிரஸ் மற்றும் திராவிடக்கட்சிகள் தங்கள் கட்சி முன்னாள், இந்நாள் எம்.பி.க்களுக்கு தனியார் கல்லூரிகள் தொடங்கி நடத்த அனுமதி கொடுத்துள்ளார்கள். 20,000 பேர் கொண்ட ஒரு பகுதிக்கே ஒரு கல்லூரி இருக்க வேண்டும் என்ற நிலையில்,27 லட்சம் மக்கள் தொகை உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லூரியை உருவாக்கவேண்டும். திருவள்ளூர் தொகுதியை தொழில் நகரமாக மாற்றவேண்டும். அதன் மூலம் நம் பகுதி மக்கள் சென்னைக்கு அலைவதையும், ரயிலை நம்பியிருப்பதையும் தவிர்க்கலாம். நேரமும் மிச்சப்படும். அலைச்சலையும் தவிர்க்கலாம். விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாறும் அவலம், மின்பற்றாக் குறையினாலும், ஒழுங்கில்லாத வினியோக முறையினாலும் விவசாயிகள் நிலங்களை ரியல் எஸ்டேட் வியாபாரிகளுக்கு மிகக்குறைவான விலைக்கு விற்று வரும் சூழ்ந்லையை மாற்றவேண்டும்.இப்போது பன்னாட்டு நிறுவங்கள் அனைத்து விளை நிலங்களையும் கபளீகரம் செய்துகொண்டிருக்கின்றன. கேள்வி : இதற்கு தாங்கள் என்ன மாற்றுத்திட்டம் வைத்திருக்கிறீர்கள்? பதில் : விவசாயிகளுக்கு தடையில்லாத மின்சாரம் வழங்கவேண்டும். சொட்டுநீர் பாசனத்தை அமல்படுத்துவோம். கேள்வி : பெண்களுக்கு என்று என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்? பதில் : பிறக்கின்ற ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் ஒரு லட்சம் ரூபாயை டெபாசிட் செய்கிறோம். வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள அனைத்து சமூக (மேல் சாதி கீழ் சாதி என்ற பாகுபாடில்லாமல்) பெண்குழந்தைகளுக்கும் இந்த முன்வைப்புத் தொகைத் திட்டம் உள்ளது. 11 வகுப்பில் படிக்கும் மாணவிகளுக்கு சைக்கிளுடன், 15,000 ரூபாய் உதவித்தொகையும், 12 ம் வகுப்பு மாணவிகளுக்கு ரூபாய் 10,000 உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. கேள்வி : பகுஜன் சமாஜ் கட்சி தமிழகத்தில் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது? பதில் : திரு செல்வப்பெருந்தகை, சிவகாமி ஐ.ஏ.எஸ். திரு சப்தரிஷி போன்ற படித்த மூத்த அரசியல் தலைவர்கள் இந்த பாராளுமன்றத் தேர்தலில் பகுஜன் சமஜ் கட்சியின் வேட்பாளர்களாக களத்தில் இறங்கியிருப்பதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். அகில இந்திய ரீதியில், மாயாவதி அவர்கள் பங்கு தவிர்க்கமுடியாதது. அவர்கள் பிரதமராகும்போது, தமிழகத்தில் இருந்து கணிசமான எண்ணிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தமிழ மக்களுக்கு பல விதமான நன்மைகள் வர காத்திருக்கின்றன. தமிழ மக்கள் எதையும் விரைவில் புரிந்து கொள்வதோடல்லாமல் செயலிலும் காட்டுவார்கள். கேள்வி : வாக்காள பெரு மக்களுக்கு தாங்கள் வைக்கும் வேண்டுகோள்? பதில் : யானைச்சின்னத்திற்கு வாக்களியுங்கள். தமிழகத்தை வளமான பாதைக்கு கொண்டு வருவது எங்கள் முழுநேரப் பணி என்பதை பணிவுடன் மக்கள் முன் வைக்கிறோம். சந்திப்பு:எஸ்ஸார்:சுகுமார் ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly newspaper send your comments and corrections |