நேர்காணல் - (10-04-2009)
கன்னியாகுமரி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சிவகாமி ஐ.ஏ.எஸ் கன்னியாகுமரி, 10-04-2009
படித்தவர்கள் அரசியலுக்கு வரத் தயங்கும் இக்கால கட்டத்தில் படித்து அட்சிப்பணியில் (ஐ.ஏ.எஸ்) இருந்து விருப்ப ஓய்வு பெற்று அரசியலுக்கு வந்திருப்பது என்பது ஒரு ஆரோக்கியமான விஷயம். அந்த வகையில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி பாராட்டுகுரியவர். கன்னியாகுமரி தொகுதியில் முதல் வேட்பாளராக பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி அறிவிக்கப்பட்டார். இவர் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஓட்டு சேகரித்து வருகிறார். பகுஜன் சமாஜ் கட்சியின் முதன்மை செயலாளரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான சிவகாமி, அவர்களுடன் தொகுதி நிலவரம் குறித்தும், கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி வாய்ப்பு குறித்தும் பல கேள்விகளை முன் வைத்தோம். பொறுமையாக தெளிவாக பதிலளித்தார். கேள்வி:கன்னியாகுமரி தொகுதியில் அரசியல் நிலவரம் எப்படி உள்ளது?. பதில்: கன்னியாகுமரி தொகுதியை பொறுத்தவரை மிக பிரகாசமாக உள்ளது. ஒரு ஆரோக்கியமான அரசியல் இங்கே சாத்தியம் என்று தோன்றுகிறது. கண்ணியமான அரசியல் செய்ய முடியும் என்கிற நம்பிக்கையை எனக்கு ஏற்பட்டுள்ளது. ஆரோக்கியம், கண்ணியம், இரண்டும் கன்னியாகுமரியில் சாத்தியம் என்றே நான் கருதுகிறேன். கேள்வி: இப்போதைய அரசியல் சூழல் எப்படியுள்ளது?. பதில்: எனக்குசாதகமாக உள்ளது. நிச்சயமாக நான் வெற்றி பெறுவேன் என்கிற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது. கேள்வி: உங்களை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து?. பதில்: நான் அவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. அவர்களை நான் கருத்தில் கூட கொள்ளவில்லை. பகுஜன் சமாஜ் கட்சியின் கொள்கை, மக்களின் எதிர்பார்ப்பு,அவர்களுடைய அடிப்படை தேவைகள், இவையே இந்த தேர்தலில் கதாநாயகர்கள். ஆகவே, கதாநாயகர்ககளை விட்டுவிட்டு, . . கோமாளி என்று சொன்னால்,கடுமையாக இருக்கும். வேறுவார்த்தை கிடைக்காததால், அவர்களைப் (கோமாளிகளை) பற்றி பேச நான் தயாராக இல்லை. ![]() கேள்வி:அ.திமுக திமுக போன்ற இரண்டு கழகங்களுக்கு மாறி, மாறி ஓட்டுப் போட்டுப், போட்டு சலித்துப் போனவர்களுக்கு மாற்றாக பகுஜன் சமாஜ் திகழுமா?. பதில்: மாற்றத்தை நான் அப்படி வில்லை. நம் குழந்தைகளை பார்த்துப், பார்த்து சலித்துப் போனதால் எவராவது இன்னொரு எவருடைய குழந்தையை எடுத்து வளர்க்க முடியாது அல்லவா?. அந்த சலிப்பல்ல இது. ஆக மக்கள் ஓட்டுப் போட்டுப், போட்டு வெறுப்படைந்திருக்கிறார்கள். கேள்வி: கன்னியாகுமரி தொகுதியில் எம்மாதியான பிரச்சாரம் செய்யவிருக்கறீர்கள்?. பதில்: உண்மையாகவும்,நேர்மையாகவும்,உருக்கமாகவும்,உணர்ச்சிகரமாகவும் பிரச்சாரம் செய்யவிருக்கிறேன்.அவர்களுடைய அறிவுத்தளத்தை (Knowledge base) எட்ட முயற்சி செய்யவிருக்கிறேன். ![]() கேள்வி: உத்திரப்பிரதேசத்தை பொறுத்தவரை செல்வி. மாயாவதி அவர்கள் வெற்றி பெற்றதற்க்கு காரணமாக கூறப்படும் விஷயங்களில் ஒன்று பிராமணர்கள் ஓட்டு. அதைப்போன்று தமிழகத்திலேயும் பிராமணர்கள் பகுஜன் சமாஜ்க்கு வாக்களிப்பார்களா? பதில்: கேள்வி: பதில்: ![]() கேள்வி: பதில்: கேள்வி: பதில்: ![]() கேள்வி: பதில்: கேள்வி: பதில்: ![]() ![]() சந்திப்பு:N.E:கண்ணன் ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly newspaper send your comments and corrections |