"கம்யூனிகேஷன்(ஸ்) பாயிண்ட்" - தமிழ் வார செய்திதாள் மற்றும் "க்ரைம் பாயிண்ட்" புலனாய்வு வாரஇதழ்

நேர்காணல் - (24-03-2009)


பாரதிய ஜனதாக்கட்சியின்,அகில இந்தியசெயலாளர் திருநாவுக்கரசருடன் ஒரு "மினி" பேட்டி


சென்னை, மார்ச்.24-


  • எஸ்.திருநாவுக்கரசர்.பாரதிய ஜனதாக்கட்சியின், அகில இந்தியசெயலாளர். சட்டக்கல்லூரியில், படித்துக்கொண்டிருந்தபோதே, தேர்தல் வேலைகளை, சுறுசுறுப்பாக செய்ததால்,புரட்சிதலைவர்,அமரர் எம்.ஜி.ஆர் அவர்களின் கவனத்தை ஈர்த்தவர்.அறந்தாங்கி,புதுக்கோட்டை,தொகுதிகளில், 6 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றது மட்டுமல்ல,எம்.ஜி.ஆரின்,நம்பிக்கையைப்பெற்று, மந்திரி சபையிலும் இடம் பிடித்தவர். தொகுதி மக்களுக்கு சிறப்பான முறையில் சேவை செய்ததால்,சுயேச்சையாக வெற்றி கண்டவர்.

    பாரதிய ஜனதாக்கட்சியின்,அகில இந்தியசெயலாளர் திருநாவுக்கரசருடன் இன்றைய அரசியல் சூழல் பற்றி சில கேள்விகள்.

    கேள்வி: மாநிலங்களின் மீது தேசிய கட்சிகளின் ஆதிக்கம் இருந்த நிலைமை மாறி, மாநிலக்கட்சியுடன் கூட்டணி அமைத்தால் தான்,தேர்தலை சந்திக்கமுடியும் என்ற சூழல் ஏற்ப்பட்டதற்க்கு,என்ன காரணம்?

    பதில்: மாநிலக்கட்சிகள், வளர்ந்துவருவதையும், செல்வாக்கு மற்றும் வாக்கு வங்கிகள் அதிகரித்ததும் முக்கிய காரணங்கள். அகில இந்திய அளவில், மாநிலக்கட்சிகளைத் தவிர்க்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது உண்மைதான்.

    கேள்வி: தமிழத்தில், உள்ள இரண்டு பெரிய திராவிடக்கட்சிகளுமே, பாரதிய ஜனதாக்கட்சியிடம் கூட்டணி வைக்காதது ஏன்?.

    பதில்:தி.மு.கழகம், காங்கிரஸ் கட்சியுட்ன் கூட்டணி அமைத்துள்ளது. அ.தி.மு.க. கொள்கைகளிலும், தொண்டர்கள் நிலையிலும் ஒத்துப்போகும் நிலை உள்ளது. ஆனாலும் கூட்டணி இதுவரை அமையவில்லை. தேர்தலுக்குப்பின் நிலமை மாற வாய்ப்புகள் உள்ளன.

    கேள்வி: உங்களுக்கு பி.ஜே.பி.யுடன் எப்படி தொடர்பு ஏற்பட்டது?.

    பதில்: அண்ணா தி.மு.க.வில் இருந்து வெளியேறி, எம்.ஜி.ஆர்.அண்ணா தி.மு.வை தொடங்கி நடத்திக்கொண்டிருந்த நேரத்தில், பி.ஜே.பி, இந்தியாவில் உள்ள சிறிய கட்சிகளை எல்லாம் இணைத்து போட்டியிட்டபோது, எங்களுக்கும் வாய்ப்பளித்தார்கள். அடல் பிஹாரி வாஜ்பாய் அத்வானி போன்ற பெரிய தலைவர்களுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பலனாக ராஜ்யசபாவில் என்னை உறுப்பினராக்கி மந்திரி பதவியும் அளித்தார்கள்.

    கேள்வி: தமிழகத்தில் பி.ஜே.பி.யின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?.

    பதில்: பி.ஜே.பி.அரசாண்ட, ஐந்து வருடங்களில்,அறிமுகப்படுத்திய, அமல்படுத்திய திட்டங்கள் இன்றுவரை மக்களுக்கு பயன்படுவதோடு மட்டும் அல்லாமல்வளர்ச்சிப்பாதையில் செலுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் 50 ஆண்டு கால சேவையை விட எங்களது 5 ஆண்டு கால பணிகளும் திட்டங்களும் மக்களுக்கு இன்று மட்டுமல்ல வரும் காலங்களிலும் பயன் தரும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் குறிப்பாக கிராம மக்களின் வளர்ச்சி அபரிமிதமானது. இதை, ஒவ்வொரு பிரச்சாரக்கூட்டத்திலும் விளக்கி கூறினாலே மக்கள் எங்களைத்தான் தேர்ந்தெடுப்பார்கள்.

    கேள்வி: ராமநாதபுரத்து மக்களுக்கு என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?.

    பதில்: இன்றைய நிலையில், மீனவர்கள் தொழிலுக்கு போக முடியவில்லை போனாலும்,திரும்பி வருவதை உறுதியாக சொல்லமுடியாத நிலை. நாங்கள் ஆட்சிக்கு வரும்போது இந்த சூழ்நிலையை மாற்றுவோம்.

    கேள்வி: தேர்தல் பிரச்சாரத்தின்போது வேறு என்ன பிரச்சினைகளை மையப்படுத்தி பேச இருக்கிறீர்கள்?.

    பதில்:முக்கியமாக, இலங்கை தமிழர்களின், ஜீவாதார உரிமை, போர் நிறுத்தம் மீனவர்கள் சுதந்திரமாக மீன் பிடிக்க வகை செய்தல் போன்றவைகள் தான் இன்றைய சூழலில் முதன்மையானவை. இவைகளைப்பற்றி பேசுவதுமட்டுமல்ல ஆட்சிக்கு வந்ததும், முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கையும் எடுப்போம்.

    கேள்வி: இலங்கையில் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த இயலாத நிலைக்கு என்ன காரணம்?.

    பதில்:காங்கிரஸ் அரசின் செயலற்ற தன்மைதான் காரணம். அடல்பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அண்டைநாடுகளுக்கு ஒரு பய உணர்ச்சி இருந்தது. இது போன்ற கொடுமைகள் செய்ய தைரியம் இல்லாத சூழல் உருவானது. உலக நாடுகள் மரியாதையுடன் நடத்தின. மறுபடியும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கட்டிலில் அமரும். காட்சிகள் மாறும்.வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் மட்டுமல்ல இந்தியர்களும் ஏற்றமும் சிறப்பும் மரியாதையும் பெறுவார்கள்.



    சந்திப்பு:Ssr.சுகுமார்.



    ©2008

    All Rights Reserved

    News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
    +91-9176186119
    +91-9841786216
    No part of this website may be reproduced or used in any form without permission
    DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly newspaper
    send your comments and corrections