இந்தியச் செய்திகள் எந்த விதத்திலும் அத்வானிக்கு மன்மோகன் சிங் இணையாக மாட்டார் பிரதமர் பேச்சுக்கு பா.ஜனதா ஆவேச பதில் ![]() புதுடெல்லி, மார்ச்.25- டெல்லியில் நேற்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா நடந்தபோது, அதில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் அத்வானி ஒரு சந்தர்ப்பவாதி என்று கடுமையாக தாக்கினார். இதற்கு பா.ஜனதா தலைவர்கள் ரவிசங்கர் பிரசாத், வெங்கையா நாயுடு இருவரும் கடும் கண்டனம் தெரிவித்து கூறியதாவது:- குணம், திறமை, நடத்தை ஆகியவற்றில் அத்வானிக்கு, பிரதமர் மன்மோகன் சிங் எந்த விதத்திலும் இணையாக மாட்டார். இந்த நாட்டின் பிரதமர்களிலேயே மன்மோகன்சிங்தான் மிகவும் பலவீனமானவர். உணர்ச்சியற்றவர். முடிவு எடுக்க முடியாதவர். பிரதமர், தலைமை மட்டுமே வகிக்கிறார். முடிவுகளை மேடம்(சோனியா) எடுக்கிறார். தற்செயலாக அவர் பிரதமர் ஆக நேர்ந்ததால்தான் தேர்தலில் போட்டியிடுவது பற்றி எப்போதும் அவரால் சிந்திக்க முடிந்ததில்லை. மேற்கண்டவாறு இருவரும் கூறினார்கள். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly newspaper send your comments and corrections |