"கம்யூனிகேஷன்(ஸ்) பாயிண்ட்" - தமிழ் வார செய்திதாள் மற்றும் "க்ரைம் பாயிண்ட்" புலனாய்வு வாரஇதழ்

ஹாட் நியூஸ் - (18-03-2009)


வருண்காந்தி மீது வழக்கு : தேர்தல் கமிஷன் பரிந்துரை



வருண்காந்தி மீது வழக்கு தொடர தேர்தல் கமிஷன் பிலிபித் உ.பி., தலைமை தேர்தல் அதிகாரிக்கு பரிந்துரை ‌செய்துள்ளது . டில்லியில் தேர்தல் கமிஷன் கூடி வருண்காந்தி பேச்சு அடங்கிய சி.டி.,யை ஆய்வு செய்தது. ஆய்வுக்குப்பின் வருண் மீது வழக்கு ‌தொடர தேர்தல் கமிஷன் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உ.பி., மாநிலம் பிலிபித் தொகுதியில் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய பா.ஜ., வேட்பாளர் வருண்காந்தி தேர்தல் விதிமுறைகளை மீறி பேசினார். குறிப்பிட்ட சமூகத்தினரை தரக்குறைவாக பேசியுள்ளார். அவரது பேச்சு ஒரு தொலைக்காட்சியில் நேரடியாகவும் ஒளிபரப்பப்பட்டது . வருண்காந்தியின் பேச்சு பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பா.ஜ., கட்சியில் உள்ள மூத்த தலைவர்களே வருண் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். வருண்காந்தியின் இந்த பேச்சுக்கு பா.ஜ., துணை தலைவர் முக்தார் அப்பாஸ் நாக்வி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தையடுத்து தர்மசங்கடமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ள பா.ஜ., தலைமையிடம் தனது கட்சி வேட்பாளர்களுக்கு பொதுக்கூட்டங்களில் பேசும் போது கவனமாக பேசுமாறு எச்சரித்துள்ளது.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission
DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly newspaper
send your comments and corrections