"கம்யூனிகேஷன்(ஸ்) பாயிண்ட்" - தமிழ் வார செய்திதாள் மற்றும் "க்ரைம் பாயிண்ட்" புலனாய்வு வாரஇதழ்

ஹாட் நியூஸ் - (17-03-2009)


'நாங்கள் யார் என்று தேர்தலுக்கு பிறகு தெரியும்': பிரகாஷ் கராத் கடும் பாய்ச்சல்



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் கராத் நேற்று டில்லியில் வெளியிட்டார்.

பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக ஆக்குவதற்குண்டான கொள்கைகளை மட்டுமே ஐ.மு., கூட்டணி கொண்டுள்ளது. அதிகாரம் மிகுந்த ஒருசில பணக்காரர்களுக்கும், பெரும்பான்மையான மக்களுக்கும் இடையிலான இடைவெளி பெரிதாகிக் கொண்டே போனதற்கு முழுக்கக் காரணம் ஐ.மு., கூட்டணி அரசு தான். "எனவே, காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற அரசாங்கத்தை மத்தியில் கொண்டு வருவதே எங்களின் முதல் வேலை' என்று பிரகாஷ் கராத் கூறினார்.

லோக்சபாத் தேர்தலில் காங்கிரசையும், பா.ஜ.,வும் தோற்கடிக்கும்படி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள அந்த தேர்தல் அறிக்கையை, கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெளியிட்ட பிறகு நிருபர்களிடம் பிரகாஷ் கராத் கூறியதாவது:

மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு நான்கரை ஆண்டுகள் ஆதரவு அளித்தபோது இடதுசாரிகள் மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளை முன்வைத்து செயல் ஆற்றியது.மன்மோகன் சிங்கும், சிதம்பரமும் தங்கள் இஷ்டபடி பொருளாதார கொள்கைகளைக் கையாள நினைத்த போது இடதுசாரிகள் கடிவாளம் போட்டன.இவர்கள் போக்கில் விட்டிருந்தால் மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணமான இன்சூரன்ஸ்,பென்ஷன் போன்றவை எல்லாம் பங்குச் சந்தையில் போடப்பட்டு பஸ்பமாகி இருக்கும்.

அன்னிய முதலீட்டை இடதுசாரிகள் தடுத்து நிறுத்தியதால் தான் ஒரு இந்திய வங்கி கூட சர்வதேசப் பொருளாதார நெருக்கடிக்கு சிக்கி நிலைகுலையாமல் தப்பி பிழைத்துள்ளன. நிதித்துறை,பொருளாதாரத்துறை ஆகியவற்றைக் காப்பாற்றி லட்சக்கணக்கானோரின் வேலைவாய்ப்பு பறிபோகாமல் காத்தது இடதுசாரிகளே. பொதுவினியோகத் திட்டத்தைப் பலப்படுத்த வேண்டிய மத்திய அரசு, அதை தற்போது மிகவும் பலவீனப்படுத்திவிட்டது. மன்மோகன் சிங் அரசின் மிகப்பெரிய துரோகம், இந்தியாவுக்கு என இருந்து வந்த சுதந்திரமான வெளிநாட்டுக் கொள்கையை மாற்றியமைத்தது தான்.பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக ஆக்குவதற்குண்டான கொள்கைகளை மட்டுமே ஐ.மு., கூட்டணி கொண்டுள்ளது. அதிகாரம் மிகுந்த ஒருசில பணக்காரர்களுக்கும், பெரும்பான்மையான மக்களுக்கும் இடையிலான இடைவெளி பெரிதாகிக் கொண்டே போனதற்கு முழு பொறுப்பு ஐ.மு., கூட்டணி அரசு தான்.பா.ஜ., ஆளும் மாநிலங்களில் மதவாத சக்திகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் பஸ்சில் பயணம் செய்யும் இரு மதங்களைச் சேர்ந்தவர்கள் பேச கூட முடியாத நிலை காணப்படுகிறது.அங்கு சார்லிசாப்ளின் சிலை வைக்க கூட எதிர்க்கின்றனர். இதுபோன்ற மதவாத சக்திகளை அடக்கி ஒடுக்குவதைத் தவிர்த்துவிட்டு சமாதானப் போக்கை கடைபிடிக்கிறது மத்திய அரசு. இவ்வாறு பிரகாஷ் கராத் தெரிவித்தார்.

அத்வானி உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் தற்போது மூன்றாவது அணி பற்றியே பேசி வருகின்றனர். நாங்கள் யாரும் மூன்றாவது அணி என்று பேசவோ அறிவிக்கவோ இல்லை. ஆனாலும், பா.ஜ.,வும், காங்கிரசும் மூன்றாவது அணி தேறாது, உருப்படாது, ஆட்சியைப் பிடிக்க முடியாது என்றெல்லாம் பேசுகின்றன.அதிலும் குறிப்பாக மூன்றாவது அணியா எப்படியென்றால் என்ன என்று பிரணாப் முகர்ஜி கேட்டுள்ளார். தேர்தல் முடிந்தவுடன் அவருக்கு விடை கிடைத்துவிடும். தேர்தலுக்குப் பிறகு நாங்கள் யாரென்று காங்கிரசுக்குத் தெரிந்துவிடும்.பிஜு ஜனதாதள தலைவர் பிஜு பட்நாயக் எங்களது அனைத்து நடவடிக்கைகளையும் ஆதரிக்கிறார். அதேபோல அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா ஆலோசனை கூட்டத்திற்கு வரமுடியவில்லையே தவிர அவர் முழுக்க முழுக்க எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்.அணியின் அனைத்து செயல்பாடுகள் குறித்த விவரங்கள் அடங்கிய நேற்றைய அறிக்கை கூட அவருக்கு பேக்ஸ் மூலம் தெரிவிக்கப்பட்டு அதை வரிக்குவரி அவர் பார்த்து தேபைடும் திருத்தங்களையும் கூட தெரிவித்தார். எனவே, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வுக்கு மாற்றாக உள்ள எங்களது அணியை நாங்களே இன்னும் மூன்றாவது அணி என்றோ அல்லது பிற பெயரிட்டு அழைக்காத நிலையிலும் பலரும் பயம் கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

தேர்தல் முடிந்தபிறகு மதச்சார்பற்ற அரசாங்கத்தை அதாவது காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற அரசாங்கத்தை மத்தியில் கொண்டு வருவே இடதுசாரிகளின் முதல் பணியாக இருக்கும். அவ்வாறு அமையப் போகும் புதிய அரசாங்கம் மக்கள் நலன் சார்ந்த பொருளாதார கொள்கைகளை கொண்டதாக இருக்கும்.

இவ்வாறு பிரகாஷ் கராத் கூறினார்.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission
DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly newspaper
send your comments and corrections