"கம்யூனிகேஷன்(ஸ்) பாயிண்ட்" - தமிழ் வார செய்திதாள் மற்றும் "க்ரைம் பாயிண்ட்" புலனாய்வு வாரஇதழ்

திரைச்செய்திகள்


சூட்டிங்கில் விபத்து : பிபாஷா பாசு கால் முறிந்தது






சூட்டிங் ஸ்பாட்டில் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்த பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவில் கால் எலும்பு முறிந்தது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். பாலிவுட்டின் ஒத்தப்பாட்டு குத்தாட்ட நாயகிகளில் முக்கியமானவர் நடிகை பிபாஷா பாசு. இவர் ஆட்டம் போடும் ஐட்டம் பாட்டு தொடர்ந்து ஹிட் ஆகி வருகிறது. தற்போது ஆ டெகான் சாரா என்ற படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியில் பிபாஷா நடித்து வருகிறார். இதற்கான சூட்டிங் மும்பையில் நடந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அவர் வழுக்கி விழுந்தார். இதில் அவரது கால் எலும்பில் முறிவு ஏற்பட்டது. வலியால் அலறி துடித்த பிபாஷாவை உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். பிபாஷாவின் கால்களை பரிசோதித்த டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அதனைத்தொடர்ந்து பெட் ரெஸ்ட் எடுக்கும்படி டாக்டர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதனால் படத்தின் சூட்டிங்கில் பிபாஷா தொடர்பான காட்சிகள் மட்டும் சில நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மற்ற காட்சிகளின் சூட்டிங் தொடர்ந்து நடந்து வருவதாக யூனிட்டார் தெரிவித்தனர்.


ஜோதா அக்பர் படத்துக்கு 5 பிலிம்பேர் விருது






பிலிம்பேர் என்ற சினிமா பத்திரிக்கை ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் 2008ஆம் ஆண்டுக்கான பிலிம்பேர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஹிருத்திக்ரோஷன், ஐஸ்வர்யாராய் நடித்த வரலாற்று படமான ஜோதா அக்பர் படத்துக்கு 5 விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த டைரக்டர், சிறந்த பாடல், சிறந்த இசையமைப்பாளர் ஆகிய 5 விருதை அந்த படம் தட்டிச் சென்றது. சிறந்த நடிகருக்கான விருது ஹிருத்திக் ரோஷனுக்கு (ஜோதா அக்பர்) கிடைத்தது. பேஷன் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது பிரியங்கா சோப்ராவுக்கு வழங்கப்படுகிறது. சிறந்த டைரக்டராக அசு தோஸ் கவுரிகா (ஜோதா அக்பர்) தேர்வு பெற்றுள்ளார். ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த பின்னணி இசைக்கு விருது (ஜோதாஅக்பர்) கிடைத்துள்ளது. ஜோதா அக்பர், தோஸ்ட் னா, கஜினி, ஜானே துயா ஜானே நா, ராக் ஆன் ஆகிய படங்கள் சிறந்த படத்துக்காக போட்டியிட்டன. இதில் ஜோதா அக்பர் சிறந்த படத்துக்கான விருதை பெற்றது. சிறந்த புதுமுக நடிகைக்கான விருதை நடிகை அசின் கஜினி படத்துக்காக தட்டி‌ச் சென்றுள்ளார்.


"பெயர்-சந்தியா, தொழில்-தாசி"






கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து, `சிங்காரி' என்ற இந்தி படம் உருவானது. உலக அழகி சுஷ்மிதாசென் தாசியாக நடித்த இந்த படம், `பெயர்-சந்தியா, தொழில்-தாசி' என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.

ஒரு தாசி, பெரும்புள்ளிகளுடன் மோதி வெற்றி பெறுவதுதான் படத்தின் கதை. கதாபாத்திரத்தை புரிந்துகொண்டு சுஷ்மிதாசென் படுகவர்ச்சியாக நடித்து இருக்கிறார். படுக்கைஅறை காட்சி களிலும் துணிச்சலாக நடித்துள்ளார். அவருடன் பிரபல பின்னணி பாடகி இல அருண் மற்றும் அனுஷ் சாஹ்னே ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள்.

ஏ.ஆர்.கே.ராஜராஜா வசனம் எழுத, கல்பனா ஜி லட்சுமி டைரக்டு செய்துள்ளார். ஆரஞ்ச் சினிமா சார்பில் கே.இளங்கோவ் தயாரிக்கிறார்.3 மாத போராட்டத்துக்குப்பின், படத்தில் ஒரு காட்சி கூட நீக்கப்படாமல், தணிக்கை சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.








"த.நா.07 அல 4777" - விமர்சனம்








இந்தியில் டாக்ஸி எனும் பெயரில் வெற்றி பெற்ற படத்தின் தமிழ் தழுவல்தான் த.நா.07 அல 4777 படம். கால் டாக்ஸி ஓட்டி கஷ்‌ட ஜீவனம் நடத்தும் பசுபதிக்கும், அப்பாவின் கோடிக்கணக்கான சொத்தை கைப்பற்ற கடும் போராட்டம் நடத்தும் அஜ்மலுக்கும் இடையில் நடக்கும் ஏழை- பணக்கார ஈகோ மோதல்தான் த.நா.07 அல. 4777.

ஏழை என்றாலே வெறுக்கும கோடீஸ்வர வாரிசான அஜ்மல், தனது பென்ஸ் கார் சர்வீஸூக்கு போனதால் ஏழை பசுபதியின் கால் டாக்ஸியில் தனது முக்கியமான கேஸ் விஷயமாக கோர்ட்டுக்கு போகிறார். ரொம்ப அவசரம் என்பதால் சிக்னலில் எல்லாம் நிறுத்தாமல் காரை வேகமாக ஓட்டச் சொல்கிறார். அதன் விளைவு ஓர் இடத்தில் கார் விபத்தை சந்திக்கிறது. டிரைவர் பகபதியோ போலீஸ், கேஸ் என்று அலைய... விபத்திற்கு காரணமாக அஜ்மல் அந்த இடத்தை விட்டு எஸ்கேப் ஆகிறார்.

ஆனால் அஜ்மலின் ‌சொத்து டாகுமென்ட்கள் இருக்கும் லாக்கர் சாவி பசுபதி கைவசம் சிக்கிக் கொள்கிறது. எனவே பசுபதியின் உதவி அஜ்மலுக்கு தேவைப்படுகிறது. பசுபதியோ சாவியை தராமல் இழுத்தடிக்கிறார். கூடவே போலீஸ் இருந்தும் சாவியை கொடுக்க மறுக்கிறார். இதனால் அஜ்மல், பசுபதியின் வீடு தேடி போகிறார். அதன் காரணமாக சிம்ரனுக்கு தன் கணவர் கால் டாக்ஸி டிரைவர் எனும் உண்மை தெரியவருகிறது. குடும்பத்தில் பூகம்பம். இதனால் அஜ்மல் மீது கடுப்பாகும் பசுபதி, அஜ்மலை தீர்த்துக் கட்ட தயாராகிறார்

இது தெரிந்து அஜ்மலும், அவர் காதலி மீனாட்சியும் பசுதியிடம் இருந்து சாவியை கைப்பற்றி அதன் பின் அவரை காலி செய்யவும் பிளான் போடுகிறார்கள். ஒரு கட்டத்தில் அஜ்மலுக்கு அவரது சொத்து கிடைக்காது என தெரிந்ததும் மீனாட்சி அவரை விட்டுப் பிரிகிறார். பசுபதி பற்றி உண்மை தெரிந்ததும் சிம்ரனும் அவரை விட்டு விலக நினைக்கிறார். இப்படியாக விறுவிறுப்பாக போகும் கதையின் இறுதியில் யார் வென்றது? என்ற கேள்விக்கு பதில்தான் க்ளைமாக்ஸ்!

இந்தியில் நானா படேகர் செய்திருந்த டாக்ஸி டிரைவர் கேரக்டரை தமிழில் பசுபதி செய்து பாதி தேறுகிறார். அஞ்சாதே நாயகர்களில் ஒருவரான அஜ்மல், இதில் பணக்கார வீட்டுப் பிள்ளையாக பந்தா பண்ணி இருக்கிறார்.

ஆர்.வி.குருதேவின் ஒளிப்பதிவும், விஜய் ஆண்டனியின் இசையும் படத்திற்கு பலம்!

பசுபதியின் மனைவியாக, ஒரு குழந்தைக்கு தாயாக சிம்ரன், ஏழ்மையாகவும், இயல்பாகவும் நடித்திருக்கிறார். அஜ்மலின் காசு - பணத்தை காதலிக்கும் மீனாட்சி, சிம்ரனையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறார். இவர்கள் இருவரையும் கெஸ்ட் ரோலில் வரும் பூஜா நடிப்பில் தூக்கி சாப்பிடுவது குறிப்பிடத்தக்கது.

த.நா.07 அல. 4777: பார்க்கலாம்








திரைச்செய்திகள்


சரத்குமார் படத்துக்கு தணிக்கை குழு அதிகாரிகள் பாராட்டு!








சரத்குமார் நடித்து, திரைக்கு வர இருக்கும் புதிய படம், `1977.' இந்த படத்தில் சரத்குமார், தந்தை-மகன் ஆகிய இரு வேடங்களில் நடித்து இருக்கிறார். படம் தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி இருக்கிறது.

சரத்குமார் ஜோடியாக நமீதா, புதுமுகம் பர்சானா ஆகிய இருவரும் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில், ஜெயசுதா நடித்து இருக்கிறார்.

வித்யாசாகர் இசையமைத்து இருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்திருப்பவர், தினேஷ்குமார்.

`1977' படம் முடிவடைந்து, தணிக்கை குழுவினருக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், ``மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம், இலவசமாக மலேசியாவுக்கு போய்வந்த திருப்தியை ஏற்படுத்துகிறது. பொதுவாக, எல்லா பட அதிபர்களிடமும் நாங்கள், ``படம் நன்றாக இருக்கிறது'' என்று கூறுவோம். ஆனால், உண்மையிலேயே 1977 படம் நன்றாக இருக்கிறது'' என்று டைரக்டர் தினேஷ் குமாரை பாராட்டினார்கள்.

சரத்குமார் இதுவரை நடித்த எந்த படத்துக்கும் இல்லாத அளவுக்கு, இந்த படத்துக்காக 200 பிரிண்ட்டுகள் போடப்பட்டுள்ளன.













"கவர்ச்சியாக நடித்தால், தப்பா?" நடிகை சார்மி பேட்டி





"காதல் அழிவதில்லை" என்ற படத்தின் மூலம் டைரக்டர் விஜய டி.ராஜேந்தரால் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டவர், சார்மி. அந்த படத்தில் இவர், சிலம்பரசனுக்கு ஜோடியாக நடித்தார்.

அதன்பிறகு ஒரு சில தமிழ் படங்களில் நடித்த சார்மி, பின்னர் தெலுங்கு பட உலகுக்கு போய்விட்டார். நீண்ட இடைவெளிக்குப்பின், "லாடம்" என்ற தமிழ் படத்தில் நடித்தார். இந்த படத்தை பார்ப்பதற்காக சென்னை வந்த சார்மி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு சார்மி அளித்த பதில்களும் வருமாறு:-

தமிழில் நீங்கள் அதிக படங்களில் நடிக்காததற்கு காரணம், வாய்ப்பு வரவில்லையா? அல்லது தமிழ் படங்களை நீங்களாகவே குறைத்துக் கொண்டீர்களா?

"காதல் அழிவதில்லை" படத்துக்குப்பின், எனக்கு நிறைய தமிழ் பட வாய்ப்புகள் வந்தன. தெலுங்கு படங்களில் "பிஸி"யாகி விட்டதால், தமிழ் படங்களை ஒப்புக்கொள்ளவில்லை. `லாடம்' டைரக்டர் பிரபு சாலமோன் ஐதராபாத் வந்து, "இந்த படத்தில் நீங்கள்தான் நடிக்க வேண்டும்'' என்று வற்புறுத்தியதால், சம்மதித்தேன்.

தெலுங்கு படங்களில், படு கவர்ச்சியாக நீங்கள் நடிப்பதாக கூறப்படுகிறதே?

அதில் தப்பு என்ன இருக்கிறது? உடம்பை காட்டினால்தான் தப்பு. கவர்ச்சி காட்டினால் தப்பு இல்லை. கவர்ச்சிக்கும், ஆபாசத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது.

ஆந்திராவில், கதாநாயகிகள் மீது வெறிபிடித்த ரசிகர்கள் இருக்கிறார்கள். சில கதாநாயகிகளை ரசிகர்கள் கட்டிப்பிடித்த சம்பவங்கள் எல்லாம் அங்கே உண்டு. உங்களை யாராவது கட்டிப்பிடித்தால், என்ன செய்வீர்கள்?

இந்தியா ஜனநாயக நாடு என்பதற்காக, யாரும் யாரையும் தொடுவதற்கு உரிமை இல்லை. நூறு ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்து படம் பார்ப்பவர்கள், அந்த படத்துடன் தங்களின் ஆசைகளை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு மேல் வெளியே எதிர்பார்க்க கூடாது. என் அனுமதி இல்லாமல், யாராவது என்னை தொட்டால், அவர்களை மன்னிக்க மாட்டேன்.

உங்கள் முதல் பட நாயகன் சிலம்பரசனுடன் நட்பு வைத்து இருக்கிறீர்களா?

அவருடன் எனக்கு தொடர்பு இல்லை.

உங்களுக்கு பிடித்த கதாநாயகன் யார்?

அமீர்கான்.

இவ்வாறு சார்மி பதில் அளித்தார்.





திரைச்செய்திகள்


எச்சரிக்கையை மீறி புகைப்படம் எடுத்ததால் ஆத்திரம் கள்ளுக்கடை காண்டிராக்டரிடம் நடிகை நயன்தாரா ரகளை








எச்சரிக்கையை மீறி புகைப்படம் எடுத்ததால் ஆத்திரம் அடைந்த நடிகை நயன்தாரா, கள்ளுக்கடை காண்டிராக்டரிடம் ஓட்டலில் தகராறு செய்தார். அவர் போட்டோ எடுத்த கேமிராவையும் பிடுங்கி தரையில் போட்டு உடைத்தார்.

நடிகை நயன்தாரா, தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக கேரள மாநிலம் கோட்டயம் வந்தார். அங்கு கோடிமதை பகுதியில் உள்ள ஒரு ஸ்டார் ஓட்டலில் தங்கி இருந்தார்.

நேற்று காலை நயன்தாரா சாப்பிடுவதற்காக ஸ்டார் ஓட்டலில் உள்ள உணவகத்திற்கு சென்றார். அப்போது, தென்இந்திய கனவுக்கன்னியை நேரில் பார்த்த ரசிகர்கள் பலர் அவரை மொய்க்கத்தொடங்கினர்.

இந்த நேரத்தில் கள்ளுக்கடை காண்டிராக்டர் ஒருவர் கேமிராவுடன் அங்கு வந்து, நயன்தாராவை விதவிதமாக படம் பிடித்தார். தன்னை புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று அவருக்கு நயன்தாரா அன்புக்கட்டளையிட்டார்.

ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் அந்த காண்டிராக்டர், நடிகை நயன்தாராவின் அழகை கேமிரா மூலம் விடாமல் புகைப்படம் எடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நயன்தாரா திடீரென அந்த காண்டிராக்டர் அருகே சென்று தகராறு செய்து, அவர் வைத்திருந்த கேமிராவை பலவந்தமாக பிடுங்கினார். பின்னர் அதனை தரையில் போட்டு உடைத்தார்.

இதைத்தொடர்ந்து நயன்தாராவின் பாதுகாவலர்கள் அந்த காண்டிராக்டர் மீது பாய்ந்து பிடித்து தாக்க முயன்றனர். நிலமை மோசமானதையடுத்து, ஓட்டல் ஊழியர்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர்.

இதற்கிடையில் சம்பவம் பற்றி அறிந்த போலீசாரும் ஓட்டலுக்கு விரைந்து சென்று, காண்டிராக்டரை பிடித்துச்சென்றனர். ஆனால் நயன்தாரா தரப்பில் இருந்து புகார் எதுவும் செய்யப்படாததால், அவரை போலீசார் எச்சரித்து விடுவித்தனர்.


ஐஸ்வர்யாராயை முந்திய நமீதா


இன்டர்நெட்டில் கூகுள்சர்ச் என்ஜினை பற்றி தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். பிரபலங்கள் பலரின் புகைப்படங்களும் இதில் தாராளமாக இருக்கும். இதில் தங்களின் மனங்கவர்ந்த நடிகர்,நடிகைகளின் புகைப்படங்களை தேடிப்பார்த்து டவுன்லோடு செய்து ரசிப்பவர்கள் கோடிக்கணக்கானோர் உள்ளனர்.அந்தவகையில் கூகுள் இணைய தளத்தில் கடந்த ஓராண்டு காலத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகர், நடிகை கள் பட்டியலில் நமீதா 3-வது இடத்தை பிடித்துள்ளார். நமீதாவின் கவர்ச்சியான புகைப்படங்களை மட்டும் சுமார் 3 கோடி பேர் தேடிப் பார்த்து டவுன்லோடு செய்துள்ளனர்.

முதலிடத்தை நடிகை கத்ரீனா கைப்பும், இரண்டாம் இடத்தை நடிகர் சல்மான்கானும் பிடித்துள்ளதாக கூகுள் இணையதளம் அறிவித்துள்ளது. ஐஸ்வர்யாராய், கரீனாகைப், அமீர்கான், ஷாருக்கான் போன்ற பிரபலங்கள் கூட இந்த பட்டியலில் நமீதாவுக்கு பின்னர் தான் இருக்கின்றனர்.


ஒரே வருடத்தில் 103 பாடல்கள் எழுதிய கவிஞர் நா.முத்துக்குமார்!


தொடர்ந்து 5 வருடங்களாக அதிக படங்களுக்கு பாடல்கள் எழுதி சாதனை புரிந்து இருக்கிறார், கவிஞர் நா.முத்துக்குமார். கடந்த (2008)-ம் ஆண்டில் மட்டும் அவர் 30 படங்களுக்கு, மொத்தம் 103 பாடல்களை எழுதி இருக்கிறார். கடந்த ஆண்டு அவர் எழுதிய பாடல்களில், "டாக்சி டாக்சி" (சக்கரக்கட்டி), "சூசூ மாரி" (பூ), "முதல் மழை எனை நனைத்ததே" (பீமா), "அன்பே என் அன்பே" (தாம்தூம்), "அடடா அடடா அடடா'' (சந்தோஷ் சுப்ரமணியம்), "சுற்றி வரும் பூமி,'' (ஜெயம்கொண்டான்), "மச்சான் மச்சான்" (சிலம்பாட்டம்), "உசிலம்பட்டி சந்தையிலே" (தெனாவட்டு) உள்பட 25 பாடல்கள் பிரபலமாகி உள்ளன. தற்போது, எந்திரன், நான் கடவுள், அங்காடித்தெரு, பையா, அயன், சிவா மனசுல சக்தி, நந்தலாலா, மரியாதை, ஜக்குபாய், நானும் என் சந்தியாவும், நாடோடிகள், ஜெகன்மோகினி உள்பட 54 படங்களுக்கு பாடல்கள் எழுதியிருக்கிறார்.


முதல் முறையாக தமிழ் பட உலகில் கொரில்லா சண்டை!


தமிழ் பட உலகில் முதல்முறையாக, "உதிரம்" என்ற படத்தில் கொரில்லா சண்டை காட்சிகள் இடம்பெறுகின்றன. இது, "அபோகலிஸ்தா" என்ற ஆங்கில படத்தை போன்ற கதையம்சம் உள்ள படம். மும்பையில் "மாடலிங்" செய்துகொண்டிருந்த ஜெகத், இந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். வில்லனாக மும்பையை சேர்ந்த மகேஷ் வர்மா அறிமுகம் ஆகிறார். கதாநாயகியாக புதுமுகம் ஐஸ்வர்யா அறிமுகம் ஆகிறார். "சிலந்தி" படத்தை தயாரித்த சங்கர், இந்த படத்தின் மூலம் டைரக்டர் ஆகிறார். படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தையும் இவரே எழுதியிருக்கிறார். கே.வி.ஆனந்திடம் உதவியாளராக இருந்த செல்லத்துரை, ஒளிப்பதிவு செய்கிறார்.


"முத்திரை"


மறைந்த ஒளிப்பதிவாளர்-டைரக்டர் ஜீவாவின் மனைவி அனீஸ் தன்வீர் கதை-திரைக்கதை எழுதி, உருவாக்கி வரும் படம், - "முத்திரை". இது, 2 திருடர்களின் கதை. திருடர்களாக டேனியல் பாலாஜி, நிதின் சத்யா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். அரசியல்வாதிகளாக சரவணன், பொன்வண்ணன் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் கிஷோர், ரியாஸ்கான், ஆனந்த், மயில்சாமி, லட்சுமிராய், மஞ்சரி, ராக்கி சாவந், ஷர்மிளி, குயிலி ஆகியோரும் பங்குபெறுகிறார்கள். யுவன்சங்கர்ராஜா இசையமைக்க, ஸ்ரீநாத் டைரக்டு செய்கிறார். ஏ.எஸ்.ஏ. புரொடக்ஷன்ஸ் மற்றும் விசன் ஜீவா ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் அமிதா பிஷ்னால், சுரேந்தர் சர்மா, அமோல் ஆகியோர் தயாரிக்க, நிர்வாக தயாரிப்பு: அனீஸ் தன்வீர், மாதங்கி, ஆயிஷா.


"காதல் தோழி"


"பிளஸ்-2" படித்து முடித்த 17 வயது இளைஞர் நிதின் ராமாகிருஷ்ணன். இவர், ஒரு படத்தின் கதை, திரைக்கதை எழுதி, டைரக்டு செய்து இருக்கிறார். அந்த படத்தின் பெயர், "காதல் தோழி". பாசத்துக்கு ஏங்கும் ஒரு "பிளஸ்-2" மாணவி மீது சக மாணவன் ஒருவன் அன்பு காட்டுகிறான். இதை காதலாக மற்றவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். அதை அவன் முதலில் ஏற்க மறுக்கிறான். பிறகு அவள் மீது உள்ள அதிக அன்பின் காரணமாக, அவளை காதலிப்பதாக ஒப்புக்கொள்கிறான். அந்த காதலை, அவனுடைய தோழி ஏற்றுக்கொண்டாளா, இல்லையா? என்பதே கதை.


"புடவை கட்டுவதை தடுக்கும் டைரக்டர்கள்" -நமீதா


தமிழ் படங்களில் கவர்ச்சியில் கலக்கும் நமீதாவுக்கு மனதில் பெரிய மனக்குறை உள்ளது. புடவை என் உடல்வாகுக்கு அழகாக இருப்பதாக பலரும் சொல்கிறார்கள். ஆனால் இயக்குனர்கள் அதை உடுத்த தடை போட்டு இருப்பதாக ஆதங்கப்பட்டார். சேலை உடுத்தி குடும்ப பாங்கான கேரக்டர்கள் இப்படங்களில் அவருக்கு அமையவில்லை. ஓரிரு காட்சிகள் புடவையுடன் வந்தாலும், முக்கால் பகுதி படத்திலும் அறைகுறையாகவே காட்டுகின்றனர்.

"எனக்கு புடவைதான் பொருந்தம், நான் கொஞ்சம் பருமன், கவர்ச்சி உடைகள் எனக்கு சரியாக இருக்காது என்று சக நண்பர்கள் அபிப்ராயம் சொல்கின்றனர். புடவைதான் கவர்ச்சியாக இருக்கும் என்கிறார்கள். எனக்கும் சேலை கட்ட ஆசைதான். ஆனால் அந்த வாய்ப்பு அமையவில்லை. புடவை கட்டாமல் கவர்ச்சியாக நடிக்கும் படி நிர்ப்பந்திக்கிறார்கள்."- நமீதா



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission
DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly newspaper
send your comments and corrections