![]() COMMUNICATION(S) POINT as your Homepage "அண்மை செய்திகள்,08/03/2010,காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி, ![]() பாராளுமன்றம், சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இடங்கள் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா, முதன் முதலில் கடந்த 1997-ம் ஆண்டு குஜ்ரால் பிரதமராக இருந்தபோது அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது. பின்னர், வாஜ்பாய் ஆட்சி காலத்திலும் அப்போதைய சட்ட மந்திரி ராம் ஜெத்மலானி முழு முயற்சி எடுத்தார். ஆனால், முக்கிய கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் எதிர்ப்பாலும், அனைத்து கட்சிகளின் ஒருமித்த ஆதரவோடு அந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என பா.ஜனதா கருதியதாலும் மீண்டும் கைவிடப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில், கடந்த 2008-ம் ஆண்டில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது டெல்லி மேல்-சபையில் மகளிர் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. முன்பு போலவே, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாடி போன்ற கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மகளிர் 33 சதவீத இடஒதுக்கீட்டுக்குள் பிற்படுத்தப்பட்ட மற்றும் முஸ்லிம் பெண்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என அந்த கட்சிகள் வலியுறுத்தின. எனினும், பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு உறுதியாக உள்ளது. ஒருமித்த ஆதரவுக்காக 13 ஆண்டுகள் கிடப்பில் கிடந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதா மற்றும் இடதுசாரி கட்சிகளும் முழு ஆதரவை தெரிவித்துள்ளன. அரசியல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமானால் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். டெல்லி மேல்-சபையை பொறுத்தவரை, அதற்கு அதிகமாகவே ஆதரவு இருக்கிறது. டெல்லி மேல்-சபையின் மொத்த இடம் 245. நியமன எம்.பி.க்கள் மற்றும் காலி இடங்கள் 12 போக மீதி 233 பேர் உள்ளனர். மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுக்கு 155 எம்.பி.க்கள் வாக்களித்தால் போதும். ஆனால் காங்கிரஸ்-71, பா.ஜனதா-45, மார்க்சிஸ்ட்-15, அ.தி.மு.க.-7, தேசியவாத காங்கிரஸ்-6, இந்திய கம்ïனிஸ்டு-5, தி.மு.க.-4, பிஜ× ஜனதா தளம்-4, தெலுங்கு தேசம்-2, திரிணாமுல் காங்கிரஸ்-2, பார்வர்டு பிளாக்-1 என மொத்தம் 162 எம்.பி.க்களின் ஆதரவு இருக்கிறது. இது குறித்து பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பி.கே.பன்சால் கூறுகையில், "மகளிர் இடஒதுக்கீடு சட்ட மசோதாவை நிறைவேற்றுவதில், எண்ணிக்கையை பொறுத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை. எனினும், அனைவரும் ஒருமித்த ஆதரவு அளிக்குமாறு நம்பிக்கையுடன் அனைத்து கட்சிகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளோம்'' என்றார். ஆனால் ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங், ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவ் ஆகியோர் சட்ட மசோதாவை தீவிரமாக எதிர்த்து வருகின்றனர். அதே நேரத்தில், ஐக்கிய ஜனதாதள மூத்த தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார், மகளிர் சட்ட மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மசோதாவை ஆதரித்து வாக்களிக்குமாறு கட்சி தலைமைக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதை சரத்யாதவ் நிராகரித்து விட்டார். மசோதாவுக்கு எதிராக வாக்களிக்குமாறு சமாஜ்வாடி கட்சியும், ராஷ்டிரீய ஜனதா தளமும் தங்கள் கட்சி எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவை பிறப்பித்துள்ளன. மேலும், மசோதாவுக்கு எதிராக மேல்-சபையில் அமளியில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளன. ஆனால், கடும் எதிர்ப்புகள் இருந்தபோதிலும் டெல்லி மேல்-சபையில் மகளிர் மசோதா 3-ல் 2 பங்கு மெஜாரிட்டியுடன் நிறைவேறுவது உறுதியாகி விட்டது. கடந்த 13 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த அந்த மசோதா, நூறாவது சர்வதேச மகளிர் தினமான இன்று பெண்களுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய பரிசாக அமைகிறது. டெல்லி மேல்-சபையில் நிறைவேறியதும், அடுத்த வாரமே பாராளுமன்றத்திலும் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்படும். பாராளுமன்றத்தில் மொத்த இடங்கள் 543. அதில், மூன்றில் இரண்டு பங்கான 362 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. காங்கிரஸ்-208, பா.ஜனதா-116, நான்கு இடதுசாரி கட்சிகள்-24 என 348 பேருடைய ஆதரவு உறுதியாக இருக்கிறது. ஏற்கனவே காங்கிரசும், பா.ஜனதாவும் தங்கள் எம்.பி.க்களுக்கு மூன்று வரி கொறடா உத்தரவை பிறப்பித்து விட்டன. இது தவிர திரிணாமுல் காங்கிரஸ்-19, தி.மு.க.-18, பிஜ× ஜனதா தளம்-14, அ.தி.மு.க-9, தேசியவாத காங்கிரஸ்-9, தெலுங்கு தேசம்-6, ம.தி.மு.க.-1, என இதர கட்சிகளின் ஆதரவும் இருக்கிறது. எனினும், அதிக ஆதரவோடு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு கருதுகிறது. எனவே, 21 எம்.பி.க்களை கொண்ட பகுஜன் சமாஜ் மற்றும் பல்வேறு கட்சிகளில் இருந்து நீக்கப்பட்ட அல்லது சுயேச்சை எம்.பி.க்களின் ஆதரவை கோரி வருகிறது. அதற்காக ஜெயப்பிரதா, ஜஸ்வந்த் சிங் போன்ற எம்.பி.க்களுக்கு பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பன்சால் விருந்து அளித்தார். பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியதும் ஜனாதிபதி ஒப்புதலுடன் அரசியல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும். மத்திய அரசின் முறையான அறிவிக்கைக்கு பிறகு, அந்த சட்டம் அமலாகும். அடுத்த தேர்தலில் இருந்தே பாராளுமன்றம் மற்றும் அந்தந்த மாநில சட்டசபை தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஒதுக்கப்படும். அடுத்த 15 ஆண்டுகளுக்கு இந்த சட்டம் தொடர்ந்து அமலில் இருக்கும். பெண்களுக்கென ஒதுக்கப்படும் பாராளுமன்ற, சட்டமன்ற தொகுதிகள், ஒவ்வொரு தேர்தலின் போதும் சுழற்சி முறையில் மாற்றப்படும். அந்தந்த மாநில சட்டசபை தேர்தல்களிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படும். ஆஸ்கர் விருது அறிவிப்பு ; சிறந்த துணை நடிகையாக கிறிஸ்டோப் வால்ஸ் சினிமா உலகில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவிலன் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹாலிவுட்டில் நடந்து வருகிறது. இதில் சிறந்த துணை நடிகருக்கான விருது இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் படத்தில் நடித்தற்காக கிறிஸ்டோப் வால்ஸ்க்கு வழங்கப்பட்டது. சிறந்த பாடலாக வெயரி கைண்ட் ( கிரேசி ஹார்ட் திரைப்படம்) என்ற பாடல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ![]() பெண்கள் இடஒதுக்கீடு மசோதா மூலம் பிற்படுத்தப்பட்ட ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ் பாட்னாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பெண்கள் மசோதா, ஒரு அரசியல் பிழை. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் முஸ்லிம் பெண்கள், பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு வந்து விடாமல் தடுப்பதற்காக, காங்கிரசும், பா.ஜனதாவும் இணைந்து செய்த சதித்திட்டம்தான், இந்த மசோதா. பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கூட கொடுங்கள். ஆனால் ஒடுக்கப்பட்ட பெண்களின் நலனை புறக்கணிக்காதீர்கள். நான் பெண்கள் மசோதாவை இறுதிவரை எதிர்ப்பேன். இதற்காக சபை காவலர்களால் வெளியேற்றப்படுவதற்கும் தயாராக இருக்கிறேன். இவ்வாறு லாலு கூறினார். சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங், லக்னோவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பெண்கள் இடஒதுக்கீடு மசோதா, மிகவும் ஆபத்தானது. இது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் முஸ்லிம் பெண்களை பாராளுமன்றத்துக்கு வர விடாமல் தடுக்கும் சதி. காங்கிரசும், பா.ஜனதாவும் மேற்கண்ட சமூகங்களுக்கு எதிரானவை. எனவே, அந்த சமூகத்தினர் தலைவராக உருவாவதை தடுக்கும் சதித்திட்டத்துடன், இந்த மசோதாவை உருவாக்கி உள்ளனர். இந்த சதியை நான் மக்களிடம் அம்பலப்படுத்துவேன். சோனியா காந்தி, மாயாவதி, மம்தா, ஜெயலலிதா உள்ளிட்டோர் இடஒதுக்கீடு இல்லாமலேயே பதவிக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு எதிராக அவர்கள் கட்சியினர் செயல்படுவது இல்லை. ஆகவே, பெண்கள் பதவிக்கு வர இடஒதுக்கீடு தேவையில்லை. காங்கிரஸ் தலைவரே ஒரு பெண்தான். அவரது கட்சியில் 33 சதவீத தேர்தல் டிக்கெட்டை பெண்களுக்கே கொடுக்கட்டுமே? யார் தடுக்கப்போகிறார்கள்? சொல்லப்போனால், 100 சதவீத தொகுதிகளையும் பெண்களுக்கே கொடுக்கலாம். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதுதான் நோக்கம் என்றால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்களுக்கு ஏன் இடஒதுக்கீடு அளிக்கவில்லை? கல்வி, வேலைவாய்ப்பில் 40 சதவீதமோ, 50 சதவீதமோ இடஒதுக்கீடு அளித்தால் எனக்கு ஆட்சேபணை இல்லை. அதை விட்டுவிட்டு, பாராளுமன்றத்திலும், சட்டசபைகளிலும் இடஒதுக்கீடு அளிப்பது, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, முஸ்லிம் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும். இப்போதே குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் இருந்து எந்த முஸ்லிம் எம்.பி.யும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இடஒதுக்கீடு வந்துவிட்டால், பெண் முஸ்லிம் எம்.பி.க்களை பார்ப்பதே அரிதாகி விடும். எனவே, உள்ஒதுக்கீடு அளிக்காமல், தற்போதைய வடிவத்தில் மசோதாவை நிறைவேற்ற அனுமதிக்க மாட்டோம். இறுதிவரை எதிர்ப்போம். வேண்டுமானால், அனைத்துக்கட்சிகளும் 20 சதவீத தேர்தல் டிக்கெட்டுகளை பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வரலாம். இந்த யோசனையை வாஜ்பாய் ஆட்சியில் ஏற்றுக்கொண்டு, வரைவு மசோதா தயாரித்தனர். ஆனால், இப்போது காங்கிரசும், பா.ஜனதாவும் சேர்ந்து கொண்டு, அந்த வரைவு மசோதாவை திருத்தி விட்டன. இவ்வாறு முலாயம்சிங் கூறினார். இதற்கிடையே, பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு உள்ஒதுக்கீடு அளிக்கப்பட்டால்தான், பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை ஆதரிப்போம் என்று மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் தேவேகவுடா அறிவித்துள்ளார். ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவ், பெண்கள் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அக்கட்சியை சேர்ந்த பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் அக்கட்சியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. எனவே, மசோதா குறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக, சரத் யாதவ் இல்லத்தில் இன்று அக்கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், பெண்கள் மசோதாவை ஆதரிப்பது என முடிவு எடுக்கப்படும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜம்முவில் ஹிஸ்புல் பயங்கரவாதி என்கவுன்டரில் கொலை ஜம்முவில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி ஒருவனை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். டோடா மாவட்டத்தில் ராஷ்டிரிய ரைபில்ஸ் படையினர் நடத்திய என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். அவனிடம் இருந்து ஏ.கே.ரைபில்ஸ் , கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ![]() மேற்கு வங்காள ஆசிரியரை மீட்க முற்றுகை மேற்கு வங்காள மாநிலம் மிட்னாபுர் மாவட்டத்தில் உள்ள சரேங்கா என்ற இடத்தில் தேர்வு கண்காணிப்பு பணியில் இருந்த ரஞ்சித்துலே என்ற ஆசிரியரை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனர். அவரை விடுவிக்க வேண்டுமானால், சிறையில் உள்ள 6 மாவோயிஸ்டு தீவிரவாதிகளை விடுதலை செய்யுமாறு நிபந்தனை விதித்தனர். இந்த நிலையில், கோல்டோர் பகுதியில் உள்ள காட்டுக்குள் அந்த ஆசிரியருடன் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே, போலீசாரும் துணை ராணுவத்தினரும் நேற்று சுற்றி வளைத்தனர். அதைத் தொடர்ந்து, கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இறுதியில் குர்சரண் என்ற மாவோயிஸ்டு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். மேலும், 5 பேர் காணமடைந்தனர். இது தவிர, மக்கள் போராட்ட குழுவை சேர்ந்த 37 பேர் கைது செய்யப்பட்டனர். திருமலை லட்டுக்கு அரியானா நெய் திருமலை திருப்பதி தேவஸ்தானம், அரியானா அரசிடம் நெய் வாங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.திருமலையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் தயாரிக்க நெய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 1 முதல் பக்தர்களின் தேவைக்கு ஏற்ப லட்டு பிரசாதம் வழங்கப்படும் என, தேவஸ்தானம் அறிவித்தது. தற்போது ஒரு லட்சத்து 30 ஆயிரம் முதல் இரண்டு லட்சம் லட்டுகள் வரை மட்டுமே தயாரிக்கப்படுகிறது. இதற்கு லட்டு தயாரிக்க தேவையான நெய் பற்றாக்குறையும் ஒரு காரணம் என, தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருப்பதி தேவஸ்தானம், தற்போது ஆந்திரா, கர்நாடகாவில் மாநில அரசு சார்பில் செயல்பட்டு வரும் பால் உற்பத்தி கழகத்திடம் இருந்து நெய் டின்களை வாங்கி வருகிறது. தினசரி லட்டு தேவைக்கு ஏற்ப நெய் சப்ளை செய்ய இந்த இரு நிறுவனங்களால் இயலவில்லை. இதனால், நெய் பற்றாக்குறையை சமாளிக்க அரியானா பால் உற்பத்திக் கழகத்திடம் இருந்து நெய் வாங்க தேவஸ்தான அதிகாரிகள், அம்மாநில அதிகாரிகளிடம் நேற்று முன்தினம் தொலைபேசி மூலம் பேச்சு வார்த்தை நடத்தினர். நெய் சப்ளை செய்ய அரியானா அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். போதுமான அளவு நெய் கிடைத்த பின் லட்டு உற்பத்தியை பெருக்கி, பக்தர்களின் லட்டு தேவை பூர்த்தி செய்யப்படும். ![]() எனக்கு எதிராக விஷமிகள் சதி திட்டம் நடிகை ரஞ்சிதாவுடன் சாமியார் நித்யானந்தா ஒன்றாக இருப்பது போன்று படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சாமியார் மீது சென்னை போலீசார் 2-வழக்குகளை பதிவு செய்தனர். அவர் எங்கு இருக்கிறார் என்பது மர்மமாக இருந்து வந்தது. இந்நிலையில் வீடியோ மூலமாக நித்யானந்தா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் உள்ள அவரது வக்கீல் ஸ்ரீதருக்கு தனது பேச்சுகள் அடங்கிய சி.டி.யை அனுப்பி வைத்துள்ளார். அதில் நித்யானந்தா கூறியிருப்பதாவது:- எனக்கு எதிராக விஷமிகள் சதி திட்டம் தீட்டியுள்ளனர். இதுவே என்னை பற்றி தவறான தகவல்கள் வெளிவர காரணமாகும். என் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியாக நான் சந்திக்க தயாராக உள்ளேன். இவ்வாறு நித்யானந்தா கூறியுள்ளதாக அவரது வக்கீல் ஸ்ரீதர் தெரிவிதார். இதற்கிடையே நடிகை ரஞ்சிதாவும், நித்யானந்தா சாமியாரும் ஒன்றாக இருப்பது போன்ற படங்களை நான்தான் எடுத்தேன் என்று சாமியாரின் சீடர் லெனின் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இவர் கொடுத்த புகாரின் பேரில் நித்யானந்தா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாமியாரின் அந்தரங்க விஷயங்களை லெனின் படம் எடுத்து வெளியிட்டதும் சட்டப்படி குற்றமாகும். இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்யலாம் என்று சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர். நித்யானந்தாவை லெனின் ஆபாசமாக படம் எடுத்து வெளியிட்டது எந்த மாதிரியான குற்றம் என்பது குறித்து வக்கீல் வானதி சீனிவாசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- தகவல் தொழில் நுட்ப சட்டப்படி, ஒருவரின் அந்தரங்க விஷயங்களை ஆபாசமாக படம் எடுத்து மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது சட்டப்படி குற்றமாகும். எனவே பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் ஆபாசபடம் எடுத்த லெனின் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யலாம். இந்த குற்றம் நிருபிக்கப்பட்டால் லெனினுக்கு 2-ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. இதேபோல் கேபிள் டிவி. ஒளிபரப்பு சட்டத்தின் கீழ், உள்ளங்களை மாசுபடுத்தும் விதத்தில், ஆபாசமான காட்சிகளை காட்டுவதும் தவறானது. இதுவும் தண்டனைக்குரிய குற்றமாகும். இவ்வாறு அவர் கூறினார். மேட்டுபாளையம் அருகே பஞ்சாலையில் பயங்கர தீ விபத்து மேட்டுபாளையம் அருகே பஞ்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான பஞ்சு எரிந்து நாசமானது. கோவை மாவட்டம் மேட்டுபாளையம் அருகே பத்திரகாளியம்மன் கோவில் செல்லும் வழியில், வெல்ஸ்புரம் என்னும் இடத்தில் டர்க்கி டவல் தயாரிக்கும் தனியார் ஆலை ஒன்று இயங்கி வந்தது. இந்த ஆலையில் நள்ளிரவு 2மணியளவில் மின்கசிவு காரணமாக பயங்ர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த ஆலையில் வைக்கப்பட்டு பலகோடி மதிப்பிலான பஞ்சு எரிந்து நாசமிகன. தொடர்ந்து தீ பற்றி எரிகிறது. தீயை அணைக்க தீயைணைப்பு வீரர்கள் 3மணி நேரத்திற்கு மேலாக போராடி வருகின்றனர். ![]() குருஜியுடன் ரகசிய இடத்தில் இருப்பதாக தகவல் "செக்ஸ்'' புகாரில் சிக்கியுள்ள நித்யானந்தா சுவாமிகள் கோர்ட்டில் முன் ஜாமீன் பெற முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் உரிய சட்ட பாதுகாப்போடுதான் வெளியே வருவார் என்று அவரது வக்கீல் தெரிவித்தார். நடிகை ரஞ்சிதாவோடு இணைத்து செக்ஸ் புகார் கூறப்பட்டுள்ள சுவாமி நித்யானந்தா மீது அவரது சீடர் லெனின் என்ற தர்மானந்தா கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன் தினம் 2-வதாக ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர். முதலில் சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் கொடுத்த புகாரின் பேரில் மோசடி வழக்கு ஒன்றை பதிவு செய்திருந்தனர். 2-வதாக பதிவு செய்த வழக்கில் கற்பழிப்பு உள்பட 6 சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் நித்யானந்தா மீது குற்றம் சுமத்தி உள்ளனர். இதே போல கோவை போலீசாரும் சாமியார் நித்யானந்தா மீது ஒரு மோசடி வழக்கை தனியாக பதிவு செய்துள்ளனர். மோசடி வழக்கை தவிர்த்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நித்யானந்தா மீது பதிவு செய்துள்ள கற்பழிப்பு வழக்கு, கர்நாடக மாநில போலீசாருக்கு மாற்றப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார். திங்கள்கிழமை (இன்று) அல்லது செவ்வாய்கிழமை அன்று கற்பழிப்பு வழக்கு விவரங்கள் கர்நாடக போலீசாருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார். இதற்கிடையில் நேற்று மாலையில், நித்யானந்தா சுவாமி தோன்றி பேசிய வீடியோ காட்சி அடங்கிய கேசட் ஒன்றை அவரது வக்கீல் ஸ்ரீதர் வெளியிட்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நித்யானந்தா மீது போடப்பட்டுள்ள வழக்கு விவரங்களை போலீசார் இன்னும் கோர்ட்டுக்கு தெரிவிக்கவில்லை. கோர்ட்டுக்கு தெரிவித்தவுடன் முன் ஜாமீன் எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். நித்யானந்தா எங்கிருந்து வீடியோ காட்சி கேசட்டை அனுப்பி வைத்தார் என்ற விவரங்களை தெரிவிக்க முடியாது. அதுபற்றி சொன்னால் போலீசார் அவரை கைது செய்து விடுவார்கள் என்பது எங்களுக்கு தெரியும். அவர் உரிய சட்டபாதுகாப்புகளோடுதான் இனி வெளியே வருவார். அவர் கேரளாவில் இருக்கிறாரா? என்பது பற்றி சொல்ல முடியாது. அவர் கடைசியாக வாரனாசியில் கும்பமேளா திருவிழாவில் கலந்து கொண்டார். அவர் தன்னுடைய அதிகாரபூர்வ இமெயில் முகவரிக்கு தனது பேச்சு அடங்கிய வீடியோ காட்சியை அனுப்பி உள்ளார். அதைத்தான் நான் கொடுத்து உள்ளேன். அவர் பாபாஜி என்ற தன்னுடைய குருஜியுடன்தான் இருக்கிறார். தற்போது புகார் கொடுத்துள்ள லெனின் சேலம் ஆத்தூரிலிருந்து, சென்னைக்கு வந்து புகார் கொடுத்துள்ளார். ஆனால் அவர் புகார் கொடுக்க வேண்டிய இடம் கர்நாடக மாநில போலீசாகும். முதலில் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளதாக சென்னை போலீசார் கூறினார்கள். இப்போது பாதிக்கப்பட்ட பெண் யாரும் புகார் கொடுக்காமல் கற்பழிப்பு வழக்கு போட்டுள்ளதாக சொல்கிறார்கள்.போலீசார் போட்ட வழக்கில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. நாங்கள் அதை சட்டரீதியாக சந்திப்போம். போலீசார் போட்ட வழக்கில் பல்வேறு பின்னணி உள்ளது என்பது மட்டும் இப்போது தெளிவாக தெரிகிறது. விரைவில் அவை வெளிச்சத்துக்கு வரும். இவ்வாறு வக்கீல் ஸ்ரீதர் தெரிவித்தார். மருத்துவக் கல்லூரிக்கு ரூ.16 கோடியில் புத்தகங்கள்: அரசு முதன்மை செயலர் தகவல் விழுப்புரம் மருத்துவக் கல்லூரிக்கு 16 கோடி ரூபாய் மதிப்பில் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளதாக முதன்மை செயலர் சுப்புராஜ் பேசினார். விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் நடந்த அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை திறப்பு விழாவில் சுகாதாரத் துறை அரசு முதன்மை செயலர் சுப்புராஜ் பேசியதாவது: நமது நாட்டில் உள்ள மக்கள் தொகைக்கு 650 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தேவை. ஆனால், 290 கல்லூரிகள் தான் உள்ளன. தென் மாநிலங்களில் 65 சதவீதமும், வட மாநிலங்களில் 35 சதவீதமும் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதனால், டாக்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு லட்சம் பேருக்கு 60 டாக்டர்கள் தான் உள்ளனர். 350 டாக்டர்கள் தேவை. இதனால், இந்திய அளவில் ஆறு லட்சம் டாக்டர்கள் தட்டுப்பாடு உள்ளது. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்று முதல்வர் அறிவித்தபடி விழுப்புரத்தில் முதலில் பணி துவங்கியது. ஆனால், வழக்குகளால் தாமதமாக பணி முடிந்து தற்போது திறக்கப்பட்டுள்ளது. தற்போது, 85 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. திட்ட பணிகள் விரைவில் முடிந்து இந்த ஆண்டு முதல் சேர்க்கை துவக்கப்படும். இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 16 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்க முதல்வர் கருணாநிதி அனுமதி வழங்கியுள்ளார். இந்த மருத்துவமனையை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக 30ம் இடத்தில் இருந்த விழுப்புரம் தற்போது 25ம் இடத்தில் உள்ளது. இதை முதலிடத்திற்கு மாற்ற அனைவரும் பாடுபட வேண்டும். இந்த ஆண்டு முதல் திருவாரூர் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மாணவர் சேர்க்கை துவக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சுப்புராஜ் பேசினார். ![]() ஆப்கானிஸ்தானில் தலீபான்களுடன் எதிர்ப்பு கோஷ்டி மோதியதில் 60 பேர் பலி ஆப்கானிஸ்தானில் தலீபான்களுக்கு அடுத்தபடியாக உள்ள மிகப்பெரிய இஸ்லாமிய குழு, ஹெஸ்ப் இ இஸ்லாமி. இந்த குழுவினர் ஹெக்மாத்தியார் தலைமையில் செயல்பட்டு வருகிறார்கள். இந்த இரு குழுக்களும் ஒரு காலத்தில் ஒன்றாக செயல்பட்டு வந்தன.இப்போது அவை எதிர்எதிராக செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்களுக்கு இடையே பக்லான் மாநிலத்தில் மோதல் ஏற்பட்டது. இதில் எதிர்ப்பு குழுவினர் 40 பேரும், தலீபான் தீவிரவாதிகள் 20 பேரும் பலியானார்கள். ராஜ் தாக்கரே மீது 73 வன்முறை வழக்குகள் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்.என்.எஸ்.,) தலைவர் ராஜ் தாக்கரே மீது, வன்முறையைத் தூண்டியதாக, மாநிலம் முழுவதும் பல்வேறு கோர்ட்டுகளில் 73 வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2008ம் ஆண்டு முதல் மகாராஷ்டிராவில் வடமாநிலத்தவருக்கு எதிராக பல்வேறு கலவரங்களைத் தூண்டிவிட்டு, அரசியல் நடத்தி வருகிறார் எம்.என்.எஸ்., கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே. வன்முறையைத் தூண்டியதாக இதுவரை இவர் மீது மொத்தம் 73 வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் அவர் ஆறு வழக்குகளில் மட்டுமே ஆஜராகியுள்ளார். மற்ற வழக்குகளில் அவர் இதுவரை ஆஜராகவில்லை. ஆனால், ஜாமீன் வாங்கப்பட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு வழக்காக அவர் ஆஜராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2010, மார்ச் மாதம் ஏழாம் நாள் அண்மை செய்திகள் ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9043023578 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly newspaper send your comments and corrections |