![]() COMMUNICATION(S) POINT as your Homepage "அண்மை செய்திகள்,07/02/2010,காலை,IST- 06.00 மணி,நிலவரப்படி, ![]() ![]() இலங்கையில் கடைசி கட்ட போரின் போது பிரபாகரன் பதுங்கியிருந்த இடம் கண்டுபிடிப்பு இலங்கையில் கடைசி கட்ட போரின் போது புலித் தலைவர் பிரபகாரன் பதுங்கியிருந்த இடத்தை இலங்கை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர். அங்கிருந்து தற்கொலைக்காக பயன்படுத்தப்படும் சூசைட் ஜாக்கெட்டுகள் ;300 கிலோ எடை கொண்ட சி-4 ரக வெடிப்பொருள் , 7000 கண்ணிவெடிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளததாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். இது தவிர 56 சி.டி., க்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தற்போது இலங்கை ராணுவத்தின் பிடியில் இருக்கும் பிரபாகரனின் கூட்டாளிகள் 6 பேர் அளித்த தகவலின் பேரில் இந்த தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை: தலீபான்கள் அறிவிப்பு லண்டனில் கடந்த மாதம் நடந்த மாநாட்டில் ஆப்கானிஸதான் அதிபர் கர்சாய் பேசுகையில், தலீபான்களை பேச்சுவார்த்தை நடத்த வரும்படி அழைத்தார். அதோடு தீவிரவாதிகளை ஆயுதங்களை கைவிட்டு வந்தால், அவர்களுக்கு வேலையும், பணமும் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக தலீபான்கள் இணையதளத்தில் வெளியிட்டு உள்ள அறிக்கையில், சமரசப்பேச்சுக்கே இடம் இல்லை என்றும் வெற்றி அடையும்வரை தொடர்ந்து போராடுவோம் என்றும் அறிவித்து உள்ளனர். ![]() கோவாவின் முன்னாள் துணைநிலை கவர்னர் காலமானார் கோவா யூனியன் பிரதேசமாக இருந்த போது துணை நிலை கவர்னராக இருந்த எஸ்.கே.பானர்ஜி இன்று காலமானார். அவருக்கு வயது 97. கோவாவில் சற்றுலா துறையை பெரிதும் மேம்படுத்திய பெருமை இவருக்கு சேரும். விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசே காரணம்: நரேந்திர மோடி டெல்லியில் இன்று நடந்த முதல்-மந்திரிகள் மாநாட்டில் குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுகையில், விலைவாசி உயர்வுக்கு தட்ப வெப்ப நிலையால் விவசாய உற்பத்தி குறைந்து விட்டதே காரணம் என்று கூறுவது ஆச்சரியமாக உள்ளது. பா.ஜ.க. ஆட்சியின் போதும் இதே மாதிரிதான் சூழ்நிலை இருந்தது. மத்திய அரசின் சில தவறான கொள்கை முடிவுகளே விலைவாசி உயர்வுக்கு காரணம் என்றார். பால்தாக்கரேவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் : ஷாருக்கான் ஐ.பி.எல்., ஏலம் குறித்த கருத்தால் சர்ச்சையில் சிக்கி, சிவசேனாவின் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ள பாலிவுட் நடிகர் ஷாருக் கான் இன்று மும்பை திரும்பினார். மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் : பால்தாக்கரே என்னை பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் அவருடன் பேசுவதற்கு தயாராக இருக்கிறேன் என்றார். யூடியுபில் பரவும் காத்ரீனாவின் தங்கை ஆபாச வீடியோ பிரபல பாலிவுட் நடிகை காத்ரீனாவின் தங்கை இசபெல்லா. இவரது 10 நிமிட ஆபாச வீடியோ படம் தற்போது யூடியுபில் வெளியிடப்பட்டு உள்ளது இது குறித்து காத்ரீனா மிகவும் ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளார். இதுபோல் 2008 ல் இன்டர்நெட்டில் வெளியான ஆபாச படம் ஒன்றில் சாகித் கபூருடன் கரீனா கபூர் இருந்தது பரபரப்பாக பேசப்பட்டு, பின் அச்செய்தி ஆதாரமில்லாமல் போனது. ஆபாச வீடியோ குறித்து சகோதரிகள் இருவரும் மவுனமா உள்ளனர். இந்த ஆபாச படம் தற்பொழுது இங்கிலாந்திலும், இந்தியாவில் மிகவும் பரபரப்பாக தேடப்பட்டு வருகிறது. ![]() சேலம் கே.பி.என்., பஸ் நிறுவன அதிபர் வீட்டில் ரெய்டு சேலம் கே.பி.என்., பஸ் நிறுவன அதிபர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரி துறையினர் போலீசார் ரெய்டு நடத்தினர். கே.பி.என்., பஸ் நிறுவன அதிபர் நடராஜன் வீடு மற்றும் பெட்ரோல் பங்கு, டிராவல்ஸ் ஆபீஸ் ஆகிய இடங்களில் ரெய்டு நடத்தினர். வருமான வரித்துறை துணை இயக்குனர் கருப்பச்சாசி தலைமையில் இந்த அதிரடி சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. தமிழ்நாட்டில் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் 20-ந்தேதி தொடங்குகிறது: 13-ந்தேதி மனுதாக்கல் தமிழ்நாட்டில் இளைஞர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பஞ்சாயத்து, வார்டு வாரியாக நடந்து வருகின்றன. வருகிற 13 மற்றும் 14-ந்தேதிகளில் மனுதாக்கல் நடக்கிறது. வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு பிறகு 20-ந்தேதி (சனி), 21-ந்தேதி (ஞாயிறு) ஆகிய நாட்களில் முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ![]() விலைவாசி உயர்வுக்கு பருவமழை பொய்த்தது தான் காரணமா ? மோடி விலைவாசி உயர்வுக்கு பருவமழை பொய்த்து விட்டதது தான் காரணம் என மத்திய அரசு கூறுவது தவறு என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசு கூறியுள்ள இந்த காரணம் ஆச்சர்யம் அளிப்பதாக தெரிவித்தார். கடந்த 2000-2002 ஆண்டுகளில் சமீபத்தில் ஏற்பட்டதை விட பருவ மழை பெய்யாததால் உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இருப்பினும் அப்போது கூட பணவீக்கம் 5 சதவீதமாக தான் இருந்தது என்றார். ஐதராபாத் கட்டிட விபத்தில் சாவு எண்ணிக்கை 14 ஆக உயர்வு ஆந்திர மாநிலம் ஐதரா பாத் நாராயண குட்டா பகுதியில் உள்ள 3 மாடி பழைய கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டதால் அதை புதுப்பிக்கும் பணி நடந்து வந்தது. இப்பணியில் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் எதிர்பாராத விதமாக அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 13 பேர் பலியானார்கள். காயம் அடைந்தவர்கள் அங்குள்ள காந்தி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இதனால் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. ![]() இந்தியா - தென்ஆப்பிரிக்கா 2-வது ஒரு நாள் போட்டி குவாலியருக்கு மாற்றம் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி வருகிற 24-ந் தேதி கான் பூரில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த போட்டி குவாலியருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரஷிய பாணியில் ராணுவ புரட்சிக்கு திட்டமிட்டார்: சரத்பொன்சேகா மீது இலங்கை அரசு குற்றச்சாட்டு சரத்பொன்சேகா இலங்கை அதிபர் ராஜபக்சே அவரது சகோதரர்கள் கோதபய, பாசில் ஆகிய 3 பேரையும் கொலை செய்யவும் பின்னர் ரஷிய பாணியில் ராணுவப் புரட்சி ஏற்படுத்தவும், திட்டமிட்டிருந்தார். `போல் ஹெவிக்' என்ற குழுவை அமைத்து, அரசு நிறுவனங்களை அவர் கைப்பற்ற திட்டமிட்டிருந்தார்' என்று இலங்கை மந்திரி அனுரா பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். மேலும் ராணுவப்புரட்சிக்கு சதி திட்டம் தீட்டியதற்காக சில ராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ![]() பங்குச்சந்தையில் சிறப்பு வர்த்தகம் பிரமாதம் பங்குச் சந்தையில் இன்று சிறப்பு வர்த்தகம் நடைபெற்றது. வழக்கமாக திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரை மட்டுமே பங்குச் சந்தைகள் இயங்கும். ஆனால் இந்த சனிக்கிழமை மட்டும் ஒன்றரை மணி நேரம் சிறப்பு வர்த்தகம் நடைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில் பங்குவர்த்தகத்துக்கான தொழில் நுட்பம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்த தொழில்நுட்ப சேவை சோதனை முறையில் இன்று சிறப்பு வர்த்தகம் நடைபெற்றது. தேசிய பங்குச் சந்தையை தொடர்ந்து மும்பை பங்குச் சந்தையும் சிறப்பு வர்த்தகத்தை அறிவித்தது. இதன்படி காலை 11 மணியில் இருந்து 12.30 மணி வரை வர்த்தகம் நடைபெற்றது. சிறப்பு வர்த்தக நேர முடிவின் போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 158.71 புள்ளிகள் அதிகரித்து 15949.64 புள்ளிகளாகவும் , தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி புள்ளிகள் 48.30 அதிகரித்து 4766.95 புள்ளிகளாகவும் வர்த்தகமாகியிருந்தது. இந்தியா-தென்ஆப் பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா "பேட்டிங்" இந்தியா-தென்ஆப் பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. தென்ஆப்பிரிக்க கேப்டன் சுமித் `டாஸ்' வென்று தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். தொடக்க வீரர்களாக சுமித்தும், பிரின்சும் களம் இறங்கினார்கள். தமிழக வீரர் பத்ரிநாத், புதுமுக விக்கெட் கீப்பர் விர்த்திமான் சகா ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது. அவர்களுக்கு இது முதல் டெஸ்ட் போட்டி ஆகும். ![]() ரேஷன் கடை திறக்க வந்த எம்.எல்.ஏ., முற்றுகை : திண்டுக்கல்லில் பரபரப்பு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ரேஷன் கடை திறக்க வந்த எம்.எல்.ஏ., வை தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த இளைஞர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேடசந்தூர் எம்.எல்.ஏ., தண்டபானி. இவர் இன்று அப்பகுதியில் ரேஷன் கடை திறப்பு விழாவுக்கு வந்தார். தொகுதியில் சாக்கடை வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததை சுட்டிக் காட்டிய இளைஞர்கள் எம்.எல்.ஏ., வை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் முற்றுகையில் ஈடுபட்ட 10க்கும் மேற்பட்ட இளைஞர்களை அழைத்து சென்றனர். ஹைதி நிவாரண பணிக்கு சென்ற ஹெலிகாப்டர் மலையில் மோதியது; 2 பேர் பலி கடந்த மாதம் (ஜனவரி) 12-ந்தேதி அமெரிக்கா அருகே உள்ள ஹைதி தீவில் கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. இங்கு நடைபெறும் மீட்பு பணி மற்றும் நிவாரண பணிகளில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பங்கேற் றுள்ளன. இந்த நிலையில் பூகம்பத் தால் பாதிக்கப்பட்டுள்ள ஹைதி தீவுக்கு நிவாரண பணியில் ஈடுபட ஒரு அமெரிக்க ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது. ஹைதி நாட்டின் எல்லை அருகே டொமினிக்கன் குடியரசு பகுதியில் ரெஸ்டாரேசியன் என்ற இடத்தில் சென்றபோது மலை மீது இந்த ஹெலிகாப்டர் மோதியது. இதனால் ஹெலிகாப்டர் நொறுங்கி தீப்பிடித்தது. இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த அமெரிக்காவை சேர்ந்த ஜேம்ஸ் ஹலோவெக், ஜான்வார்டன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2010, பிப்ரவரி மாதம் ஐந்தாம் நாள் அண்மை செய்திகள் ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9043023578 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly newspaper send your comments and corrections |